காலியாகும் பாஜக கூடாரம்!! லட்சுமி ராமகிருஷ்ணன் விலகல்!!

 
லட்சுமி ராமகிருஷ்ணன்


 பாஜகவில் சலசலப்புக்கு எப்போதும் பஞ்சமில்லை எனும் வகையில் தினம் ஒரு பரபரப்பு, சர்ச்சை, எதிர்ப்பு குரல்கள் என தொடர்கதையாகி வருகிறது. சில நாட்களுக்கு முன் காயத்ரி ரகுராமை 6 மாதம் பாஜகவிலிருந்து சஸ்பெண்ட் செய்வதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்திருந்தார். இதனையடுத்து காயத்ரி ரகுராம் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்தார். இது குறித்து அவர் வெளியிட்ட பதிவில்  பாஜகவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை .

லட்சுமி ராமகிருஷ்ணன்

நான் விலகியதற்கு  முழுக்க, முழுக்க அண்ணாமலை தான் காரணம் என  அண்ணாமலை மீது தொடர் குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார். விரைவில் காயத்ரி ரகுராம்  திமுகவில் இணைய இருப்பதாகவும் பல்வேறு தரப்பிலிருந்தும்  பரபரப்பு தகவல்கள் வெளியாகிவ் வருகின்றன. இதனால் உருவான தொடர் புகார்கள், குற்றச்சாட்டுக்கள், கருத்து வேறுபாடுகள், சர்ச்சை பதிவுகள் முழுமையாக முடிவுக்கு வரவில்லை.

காயத்ரி ரகுராம் அண்ணாமலை

அதற்குள், மற்றொரு நடிகையும், இயக்குனருமான பிரபல நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் பாஜகவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். அவர் இது குறித்து வெளியிட்ட பதிவில் 'பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத காரணத்தால் விலகுவதாக' காயத்ரி ரகுராம் சொன்ன அதே வார்த்தைகளை கூறியுள்ளது மேலும் சலசலப்பை உருவாக்கியுள்ளது.  இவர்களின் இந்த குற்றச்சாட்டுக்களால் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையையும், பரபரப்பையும் உருவாகியுள்ளது. 

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

From around the web