பரபரப்பு!! நயன்தாராவின் ‘கனெக்ட்’ திரையரங்குகளில் வெளியாவதில் திடீர் சிக்கல்!!

 
கனெக்ட்

தமிழ் திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டாராக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் நடிகை நயன் தாரா. இவர் அஸ்வின் சரவணன் இயக்கத்தில்  நடித்துள்ள 'கனெக்ட்' படம் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த படத்தில்  நடிகை நயன் தாரா, சத்யராஜ், வினய்  என நட்சத்திரப் பட்டாளங்கள் நடித்துள்ளனர். இந்த படம் பேய் படமாக தயாராகி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  

கனெக்ட்

கொரோனா ஊரடங்கு காலத்தில்  நயன்தாரா தனது மகளுடன் வீட்டில் இருக்கும்போது அமானுஷ்யங்களில் சிக்கி கொள்வதாக கதை தயாராகி உள்ளது. நயன் தாரா அதிலிருந்து எப்படி தப்பிக்கிறார் என்பது தான் கதை.  இந்த படம் மொத்தம் 99 நிமிடங்கள் ஓடக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்துக்கு  இடைவேளை கிடையாது என  படக்குழு அறிவித்துள்ளது. இது குறித்து திரையரங்கு உரிமையாளர்கள் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் படத்தின்  இடைவேளையின் போது தான் பார்வையாளர்கள் வெளியே வந்து தியேட்டர் கேண்டீனில் உணவு பண்டங்கள் வாங்கி சாப்பிடுவர். இந்த நேரத்தினை விட்டால் தியேட்டர் வருமானம் பெரிதாக பாதிக்கப்படும்.

கனெக்ட்

இதனால்  கனெக்ட் படத்தை இடைவேளை இல்லாமல் திரையிட முடியாது என  தியேட்டர் அதிபர்கள் தெரிவித்துள்ளனர்.  தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்க நிர்வாகி விடுத்த செய்திக்குறிப்பில்  ''நயன்தாராவின் கனெக்ட் படத்துக்கு இடைவேளை கிடையாது என்று அவர்களாகவே அறிவித்து உள்ளனர். தியேட்டர் அதிபர்களிடம் இது பற்றி அவர்கள் ஆலோசனை நடத்தவே இல்லை.  இடைவேளை இல்லாமல் எங்களால் படத்தை திரையிடமுடியாது''  எனக் கூறியுள்ளார். இதனால் நயன் தாரா திரைப்படம் திரையரங்குகளில் வெளியாவது சிக்கலாகியுள்ளது. ரசிகர்கள் வட்டாரங்களில் இச்சம்பவம் பெரும் பரபரப்பாகி உள்ளது.

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

From around the web