ரணகளத்திலேயும் குதூகலம்.. சைனாக்காரனின் தினுசான கொண்டாட்டம்!!

 
கொக்கு மாஸ்க்

சீனாவில் மீண்டும் கொரோனா வேகமெடுக்க தொடங்கியுள்ளது. ஒரே நாளில் 3 கோடி பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. இதனையடுத்து உலகின் மற்ற நாடுகளிலும் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கான தடுப்பு முறைகளும்,  முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

 

சீனாவை பொறுத்தவரை மருத்துவமனைகளில் நிரம்பி வழிகின்றன. உயிரிழப்புக்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.  தகன மேடகள் இடைவிடாமல் எரிந்து கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகின்றன. இது குறித்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி பீதியை கிளப்பியுள்ளது. ஆனால் கொரோனா பலி எண்ணிக்கை குறித்து சீனா இதுவரை சரியான  தகவல் தெரிவிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.  இந்நிலையில் சீனாவில் கொரோனாவால் தினமும் 5000 உயிரிழப்புக்கள் ஏற்படுவதாக லண்டன்  ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் முகக்கவசங்களில் வித்தியாசத்தையும், மாறுபாட்டையும் புகுத்தி புதுவகையான  முகக்கவசத்தை அறிமுகப்படுத்தியுள்ளனர். இது குறித்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில், ஒருவர் உணவகத்தில் சாப்பிட்டு கொண்டிருக்கிறார்.


அவரது முகத்தில் கொக்குவடிவ முகக்கவசம் பொருத்தப்பட்டுள்ளது.  இந்த முகக்கவசம் சாப்பிடும் போதெல்லாம் ஒரு கொக்கு வாய்போல் திறந்து மூடுகிறது. பார்க்கவே வேடிக்கையாக உள்ள இந்த வீடியோவை சபீர் என்பவர் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். இதற்கு பலரும் சிரிப்பு எமோஜிகளை  பதிவிட்டுள்ளனர். சீனாவின் சுகாதாரத்துறை  ஆணையம் கொரோனா குறித்த மதிப்பீடுகளை வெளியிட்டுள்ளது.

 

அதில்  இந்த வாரம் ஒரே நாளில் சீனாவில் சுமார் 3.7 கோடி மக்கள் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டிருப்பர் . சீனாவின் கொரோனா பாதிப்பு தான் உலகிலேயே மிகப்பெரியது. ஏனெனில் இங்கு தான் மக்கள் தொகை அதிகம் . வயதானவர்களுக்கு தடுப்பூசி போடுவதில் தோல்வியையே சந்தித்தது. கொரோனாவை கட்டுப்படுத்துவதை விடுத்து  மருத்துவ உள்கட்டமைப்பை பெருக்கியது இவையே மீண்டும் ஜெட்வேகத்தில் பரவும் இந்த கொரோனா பாதிப்புக்கு காரணமாக கூறப்படுகிறது. இந்த முகக்கவசம் கண்டுப்பிடிச்சதிலிருக்க அக்கறைய தடுப்பூசி போடறதில கவனம் செலுத்தியிருந்தா நாங்க தப்பிச்சிருப்போமேடா? என வடிவேலு பாணியில் கதறுகின்றனர் நம்மூர் பார்ட்டிகள்.

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

From around the web