பரபர வீடியோ!! பிரபல பாலிவுட் நடிகை ராக்கி சாவந்த் கைது!!

 
ராக்கி சாவந்த்

பிரபல பாலிவுட்  நடிகையான   ராக்கி சாவந்த் தொலைக்காட்சி மற்றும் விழாக்களில்  நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் இருந்து வருகிறார். இவர்  அவ்வப்போது தாறுமாறான கருத்துக்களை வெளியிட்டு  சர்ச்சைகளிலும் சிக்கிக் கொள்வதுண்டு. என் சகியே,  முத்திரை,படங்களில் ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் நடனம் ஆடியிருக்கிறார்.

ராக்கி சாவந்த்

2019ல் இவருக்கு ரிதீஷ் சிங்குடன் திருமணம் நடைபெற்றது. கடந்த ஆண்டு  விவாகரத்து பெற்ற நிலையில்  மைசூருவில் வசித்து வரும்  ஆதில் கான் துரானியைக் காதலித்து ரகசிய திருமணம் செய்துகொண்டதாக செய்திகள் வெளியாகின.  இந்நிலையில், நடிகை ஷெர்லின் சோப்ரா குறித்து அவதூறு கருத்துகளை பரப்பியதாக  ஷெர்லின் சோப்ரா  காவல்துறையில்  புகார் அளித்துள்ளார்

. இந்த புகாரின் அடிப்படையில்   வழக்கு பதிவு செய்யப்பட்டு  ராக்கி சாவந்த் கைது செய்யப்பட்டுள்ளார். பிரபல மாடல், பாலிவுட் திரைப்படத் தயாரிப்பாளர் மற்றும் நடிகையுமான ஷெர்லின் சோப்ரா இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில், பாலிவுட் நடன கலைஞரான ராக்கி சாவந்த் கைது செய்யப்பட்டுள்ளதாக பதிவிட்டுள்ளார்.  நடிகை ராக்கி சாவந்துக்கு 10 காதலர்கள் உள்ளதாக ஷெர்லின் சோப்ரா வீடியோவில் கூறியதாக புகார் அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

From around the web