செயல் அலுவலரே, கோவிலில் 30 கிராம் தங்கத்தைத் திருடிய கொடுமை! கொந்தளித்த பக்தர்கள்!?

 
சமயபுரம்  மாரியம்மன்

தமிழகத்தில், மிகப் பிரசித்திப் பெற்ற அம்மன் ஸ்தலங்களில் திருச்சி சமயபுரம் மாரியப்பன் ஆலயம் மிக முக்கியமானதாக. இந்த ஸ்தலத்திற்கு திருச்சி மாவட்டத்தில் இருந்து மட்டுமல்லாமல், தமிழகத்தின் பிற மாவட்டங்கள், பிற மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து சென்று தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றி காணிக்கைகளை உண்டியலில் செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கைகளை கோயிலின் மண்டபத்தில் கோயில் இணை ஆணையர் கல்யாணி தலைமையில் உதவி ஆணையர்கள் முன்னிலையில் தன்னார்வலர்கள் , கோயில் பணியாளர்கள் உள்ளிட்டோர் காணிக்கைகளை எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.  இதில் பக்தர்கள் கோயில் உண்டியலில்  செலுத்திய காணிக்கைகளை கடந்த வியாழக்கிழமை எண்ணிய பொழுது ரூபாய்.83 லட்சத்து 79 ஆயிரத்து 394 ரொக்கமும், 2 கிலோ 667 கிராம் தங்கமும், 3 கிலோ 121 கிராம் வெள்ளியும், வெளிநாட்டு பணம் 104ம் கிடைத்தது.

சமயபுரம் மாரியம்மன் திருச்சி உண்டியல்

சமயபுரம் மாரியம்மன் கோயில் கண்காணிப்பாளர் அழகர்சாமி, தன்னார்வலர்களும், கோயில் பணியாளர்களும் காணிக்கை எண்ணும் பணியினை சிசிடிவி காட்சியில் கண்காணித்தப்படி பார்த்து கொண்டிருந்த போது அதிர்ச்சி அடைந்தார். அந்த சிசிடிவி காட்சியில் திருவெறும்பூர் எறும்பீஸ்வரர் கோயில் செயல் அலுவலர் வெற்றிவேல் என்பவர், தன்னை யாரும் பார்க்காத நேரத்தில் சுமார் 30 கிராம் எடையுள்ள தங்க நாணயங்களை திருடி அவரது பேன்ட் பாக்கெட்டில் மறைத்து வைக்கும் காட்சிகளை சிசிடிவியில் பார்த்து கோயில் கண்காணிப்பாளர் அதிர்ந்து போனார். 

உடனடியாக இது குறித்து சமயபுரம் கோயில் இணை ஆணையர் கல்யாணியிடம் கண்காணிப்பாளர் அழகர்சாமி தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து ரூ.1.50 லட்சம் மதிப்புள்ள 30 கிராம் தங்க நாணயங்களை திருடிய செயல் அலுவலர் வெற்றிவேலிடமிருந்து நாணயங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

திருச்சி சமயபுரம் மாரியம்மன்

இந்த திருட்டு குறித்து சமயபுரம் காவல் நிலையத்திலும், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் உள்ளிட்டோருக்கு கோயில் இணை ஆணையர் கல்யாணி புகார் அளித்தார். இந்த செய்தி அறிந்த செயல் அலுவலர் வெற்றிவேல் தற்போது தலைமறைவாகியுள்ளார். சமயபுரம் கோவிலில் பக்தர்கள் வழங்கிய காணிக்கையை கோவில் செயல் அலுவலரே திருடிய சம்பவமும் பக்தர்களைக் கொந்தளிக்க செய்துள்ளது.

செயல் அலுவலர் வெற்றிவேல், தங்க நாணயங்களைத் திருடுவது கண்காணிப்பு கேமிராவில் பதிவாகி உள்ளது. கையும், களவுமாக அவர் திருடுவதைக் கண்டுப்பிடித்து, நாணயங்களை அவரிடம் இருந்து மீட்டவர்கள், உடனடியாக இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்து, காவல் நிலையத்தில் ஒப்படைக்காமல், அவரை வீட்டுக்கு அனுப்பி விட்டு, திருட்டு சம்பவம் நடந்து ஒரு நாள் கழித்து போலீசாரிடம் இணை ஆணையர் கல்யாணி ஏன் புகார் அளிக்கிறார்? இதன் உள் நோக்கம் என்ன? திருடிய நகையினை செயல் அலுவலரிடமிருந்து பறிமுதல் செய்த போதே அவரை காவல் நிலையத்தில் ஒப்படைக்க தவறியது ஏன்? என சந்தேகம் பலருக்கும் எழுகிறது.

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

From around the web