சொத்து வரி செலுத்த கால அவகாசம் நீட்டிப்பு!! சென்னை மாநகராட்சி அதிரடி!!

 
சொத்து வரி

சென்னை மாநகராட்சி சட்டவிதிகளின் படி  6 மாதங்களுக்கு ஒருமுறை சொத்து வரி வசூலிக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் 2 வது அரையாண்டுக்கான சொத்துவரியை தற்போது செலுத்த வேண்டும். ஆனால் பலர் இன்னும் செலுத்தி முடிக்காத சூழலில் தற்போது அதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப்சிங் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

சொத்துவரி

அதில்  ஒவ்வொரு அரையாண்டின் தொடக்கத்தின் முதல் 15 தினங்களுக்குள் சொத்துவரி செலுத்துபவர்களுக்கு 5 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.5000 ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டு வருகிறது.அந்த வகையில் கடந்த ஏப்ரல் மாதம் மாநகராட்சி, நகராட்சிகள்‌ மற்றும்‌ பேரூராட்சிகளில்‌ சொத்து வரி விகிதங்களை 25% முதல் 150% வரை உயர்த்தி தமிழக அரசு அறிவித்திருந்தது.

சொத்துவரி

600 சதுர அடிக்கும்‌ குறைவான பரப்பளவு உள்ள குடியிருப்பு கட்டடங்களுக்கு 25 சதவீதம்‌ மட்டும்‌ சொத்து வரி உயர்த்தப்பட்டது. 601 முதல்‌ 1200 சதுர அடி வரை பரப்பளவு உள்ள குடியிருப்பு கட்டடங்களுக்கு 50 சதவீதம்‌ ‌ சொத்து வரி உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. உயர்த்தப்பட்ட சொத்து வரியினை இது வரை 5.92 லட்சம் பேர்  செலுத்தி உள்ளனர். மேலும் உயர்த்தப்பட்ட சொத்து வரியினை இதுநாள்வரை செலுத்தாதவர்கள், டிசம்பர் 15க்குள் செலுத்தினால் அபராதம்  எதுவும்  இல்லாமல் செலுத்திக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி டிசம்பர் 15ம் தேதிக்குள் சொத்துவரியை செலுத்தி 2 சதவீத தனி வட்டியினை தவிர்க்கலாம் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. 

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

மப்பேறி தள்ளாடும் நாய்!! மதுவை குடித்ததால் பரிதாபம்!!

From around the web