சொத்து வரி செலுத்த கால அவகாசம் நீட்டிப்பு!!

 
சொத்து வரி

சென்னை மாநகராட்சிக்கான வரும் வருமானங்களில் முக்கியமானது  சொத்து வரி மற்றும் தொழில் வரி.இதன் மூலமாக ஆண்டுக்கு ரூ1400கோடி வருமானம் ஈட்டப்படுகிறது.   இதனை அரையாண்டுக்கு ஒரு முறை என இரண்டு தவணைகளாக வசூலித்து வருகிறது. பொதுவாக சொத்து வரியை ஒவ்வொரு அரையாண்டின் முதல் 15 நாட்களுக்குள் செலுத்தினால் 5% அல்லது 5,000 ரூபாய் வரை ஊக்கத்தொகை அளிக்கப்பட்டு வருகிறது. 

ப்ரியா சென்னை மாநகராட்சி பட்ஜெட்
இதற்கு பின்பு சொத்து வரி செலுத்துபவர்களுக்கு  2% தனி வட்டி விதிக்கப்படும். மேலும் நடப்பு  நிதியாண்டில் சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளதால், ஜனவரி 12ம் தேதி வரை தனி வட்டி இல்லாமல் சொத்து வரி செலுத்தலாம் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. இன்று சென்னை மாநகராட்சி கட்டிடத்தில் இது குறித்து நடத்தப்பட்ட ஆலோசனை கூட்டத்தில் மேயர், துணை மேயர், ககன் தீப் சிங் , உயர் அதிகாரிகள், செயல் தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

சொத்துவரி

இந்த ஆலோசனைக்கூட்டத்திற்கு பிறகு விடுக்கப்பட்ட செய்திக்குறிப்பில்  சென்னை மாநகராட்சியில் தனி வட்டி இல்லாமல் சொத்து வரி செலுத்துவதற்கு ஜனவரி 15ம் தேதி வரை கால அவகாசத்தை நீட்டிக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தவிர  நகர திட்டமிடல் துறை தீர்மானங்களும், அது குறித்த  கட்டணங்களை மாற்றி அமைக்கவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும் மீனம்பாக்கம், சோழிங்கநல்லூர் ஆகிய இடங்களில் புதிய நாய் இனக்கட்டுப்பாடு மையம் அமைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

From around the web