டிசம்பர் 15ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிப்பு! மாநகராட்சி அறிவிப்பு!

 
சென்னை மாநகராட்சி

சொத்து வரி செலுத்துவதற்கான கால அவகாசத்தை டிசம்பர் மாதம் 15ம் தேதி வரை நீட்டிப்பு செய்து சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பின் மூலமாக பொதுமக்கள் தங்களது இரண்டாவது அரையாண்டுக்கான சொத்து வரியை வட்டி இல்லாமல் டிசம்பர் 15ம் தேதிக்குள் செலுத்தலாம்.

க்

இது குறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி வெளியிட்டுள்ள அறிவிப்பில்,  சென்னை மாநகராட்சி முனிசிபல் சட்ட விதிகளின்படி ஒவ்வொரு அரையாண்டின் தொடக்கத்தின் முதல் 15 தினங்களுக்குள் சொத்து வரி செலுத்தும் சொத்து உரிமையாளர்களுக்கு செலுத்தப்படும் சொத்து வரியில் ஐந்து சதவிகிதம் அல்லது அதிகபட்சமாக 5 ஆயிரம் ஊக்க தொகையாக வழங்கப்பட்டு வருகின்றது.

2022-23 நிதியாண்டின் முதல் அரையாண்டில் சொத்துவரி சீராய்வு செய்யப்பட்டிருக்கும் நிலையில் தற்போது இரண்டாம் அரையாண்டுக்கான சொத்துவரி சீராய்வின்படி சொத்து உரிமையாளர்களால் 1. 10. 2022 முதல் செலுத்தப்பட்டு வருகிறது.

சொத்து வரி

சொத்து வரி சீராய்வின்படி உயர்த்தப்பட்டிருக்கும் சொத்து வரியில் செலுத்தாதவர்கள் வரி இல்லாமல் செலுத்துவதற்கு 15. 11. 2022 வரை கால அவகாசம் வழங்கப்பட்டிருக்கிறது . இதன்படி இதுவரைக்கும் செலுத்தாதவர்கள் வட்டி இல்லாமல் டிசம்பர் 15ம் தேதி வரை செலுத்தி கொள்ளலாம் . இரண்டு சதவிகித தனி வட்டியினை தவிர்க்க இந்த வாய்ப்பு அளிக்கப்பட்டிருக்கிறது என்று கூறியிருக்கிறார். பொதுமக்கள் இதனைப் பயன்படுத்திக் கொண்டு, தங்களது சொத்து வரிகளை டிசம்பர் 15ம் தேதிக்குள் செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

மப்பேறி தள்ளாடும் நாய்!! மதுவை குடித்ததால் பரிதாபம்!

From around the web