கல்லூரி மாணவிகளுக்கு இலவச ஸ்கூட்டி!! அதிரடி அறிவிப்பு!!

 
ஸ்கூட்டி

குஜராத் மாநில சட்டசபைக்கு டிசம்பர் 1 மற்றும் 5ம் தேதிகளில் 2  கட்டங்களாக தேர்தல் நடைபெற இருக்கிறது. இதனையடுத்து அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

ஸ்கூட்டி

பல்வேறு தேர்தல் வாக்குறுதிகளையும்  அளித்து வருகின்றன.  இதில் 89 தொகுதிகளுக்கு டிசம்பர் 1ம் தேதி தேர்தல் நடக்க இருக்கும் நிலையில்  பிஜேபி மீண்டும் ஆட்சியை பிடிக்கலாம் என்ற நம்பிக்கையுடன் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தியுள்ளது. அந்த வகையில் சட்டசபை தேர்தலை முன்னிட்டு பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா இன்று தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளார். இதில்  ஆரம்பப் பள்ளி முதல் முதுநிலை பட்டப்படிப்பு வரை பெண்களுக்கு தரமான இலவச கல்வி வழங்கப்படும்.கல்லூரி மாணவிகளுக்கு இலவச மின் இரு சக்கர வாகனம் வழங்கப்படும்.

தேர்தல்

மகளிர் மற்றும் மூத்த குடிமக்களுக்கு அரசு  பேருந்துகளில் இலவச பயணம் மேற்கொள்ளும் வகையில்  நடவடிக்கை எடுக்கப்படும். அடுத்த 5 ஆண்டுகளில் பெண்களுக்கு ஒரு லட்சம் அரசு வேலைவாய்ப்புகளும்,  இளைஞர்களுக்கு 20 லட்சம் வேலைவாய்ப்புகளும்  உருவாக்கப்படும் எனத் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

மப்பேறி தள்ளாடும் நாய்!! மதுவை குடித்ததால் பரிதாபம்!!

From around the web