பிரபல பரதநாட்டிய கலைஞர் லட்சுமி விஸ்வநாதன் திடீர் மரணம்!

 
லட்சுமி விஸ்வநாதன்

தமிழகத்தில் மட்டுமல்ல சர்வதேச அளவில் புகழ்பெற்ற முண்ணனி பரதநாட்டிய கலைஞர்களில் ஒருவர்  லட்சுமி விஸ்வநாதன் . இவருக்கு வயது 78. இவர் வயது மூப்பால் உடல் நலக் குறைபாடு காரணமாக கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்று வந்தார் இவர்  நடன குரு, எழுத்தாளர் மற்றும் ஆய்வாளர் என பன்முகத் திறமை  கொண்டவர். சென்னை அடையாறில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று காலை மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்ட உடன் அவரது சகோதரி சாருமதி ராமச்சந்திரனிடம் தெரிவித்தார். சாருமதியும் மிகப்பெரிய கர்நாடக இசைப் பாடகர். 

லட்சுமி விஸ்வநாதன்

பிரபல திரைப்பட இயக்குநர் கே.சுப்ரமணியத்தின் சகோதரர் கே.விஸ்வநாதன் - அலமேலு தம்பதியரின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.  இவரது 7 வது வயதில் மயிலாப்பூரில் உள்ள ரசிக ரஞ்சனி சபாவில் அரங்கேற்றம் நடைபெற்றது. லட்சுமி விஸ்வநாதன்   சென்னை பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியம் பயின்று அதில்  தங்கப்பதக்கம் பெற்றவர். பிரபல கர்நாடக இசைப் பாடகி எம்.எஸ்.சுப்புலட்சுமி, பரத நாட்டியம் குறித்து  4 நூல்களையும் எழுதியுள்ளார்.


இவர்  கலைமாமணி விருது, மத்திய அரசின் தேசிய சங்கீத நாடக அகாடமி விருது, கிருஷ்ண கான சபா வழங்கிய நிருத்ய சாருமதி விருது, சென்னை மியூசிக் அகாடமி வழங்கிய நிருத்ய கலாநிதி விருது என  பல்வேறு விருதுகளைப் பெற்று சாதனை படைத்தவர். இவரது உயிரிழப்பு குறித்து சென்னை மியூசிக் அகாடமி தலைவர் என். முரளி  விடுத்த செய்திக்குறிப்பில் , ''லட்சுமி விஸ்வநாதனின் நடனம் மிகவும் ஆழமான மற்றும் நுட்பமானதாக, அழகியல் நிறைந்த அறிவார்ந்த அணுகுமுறையில் அமைந்திருக்கும். அவர் ஒரு சிறந்த நடனக் கலைஞர். அத்துடன்  சிறந்த எழுத்தாளராகவும், பல ஆராய்ச்சி கட்டுரைகளை எழுதியவராகவும் திகழ்ந்து சாதனைகள் படைத்தவர்.  

rip

லட்சுமி பல காலம் சென்னை மியூசிக் அகாடமியின் உறுப்பினராகவும் பின்னர் துணைத் தலைவராகவும் பதவி வகித்து வந்தார். பரதநாட்டிய குரு பத்மா சுப்ரமணியம் விடுத்த செய்திக்குறிப்பில்  ''லட்சுமி விஸ்வநாதன் மறைவு என்பதை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. அத்தனை மனவலி.  அவரது இழப்பு எனக்கு மட்டுமல்ல பரதநாட்டிய உலகத்துக்கே ஏற்பட்ட பேரிழப்பு'' எனத் தெரிவித்துள்ளார். 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

From around the web