பிரபல தமிழ்பட நடிகைக்கு நிறமிழப்பு நோய்! கொஞ்சம் கொஞ்சமாக நிறத்தை இழப்பதாக உருக்கமான பதிவு!

 
மம்தா மோகன்தாஸ்

தான் கொஞ்சம் கொஞ்சமாக தன்னுடைய நிறத்தை இழந்து வருவதாகவும், அரிய வகையான விட்டிலிகோ என்கிற சரும நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், நடிகை  மம்தா மோகன்தாஸ்  அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமான பதிவை வெளியிட்டுள்ளார். 

கடந்த 2005ம் ஆண்டு வெளியான ‘மயோக்கம்’ மலையாள படத்தின் மூலமாக திரையுலகில் அறிமுகமான நடிகை மம்தா மோகன் தாஸ், அதன் பின்ன்னர் மலையாளத்தில் முன்னணி நடிகர்களுடன் பல படங்களில் நடித்துள்ளார். ஒரு கட்டத்தில் மலையாளம் மட்டுமல்லாமல் தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளிலும் நடித்து வந்த மம்தா, தனது பாந்தமான நடிப்பினால், ரசிகர்களிடையே விரைவிலேயே நல்ல பெயர் பெற்றார். 

விஷால் நடிப்பில் வெளியான ‘சிவப்பதிகாரம்’ படத்தின் மூலமாக கரு.பழனியப்பன் இயக்கத்தில் தமிழில் அறிமுகமானவர், ரஜியின் ‘குசேலன்’, குரு என் ஆளு, தடையரா தாக்க, எனிமி ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில், ஆட்டோ இம்யூன் எனப்படும் விட்டிலிகோ நோயினால் தான் பாதிப்படைந்துள்ளதாகவும், தன்னுடைய தோலின் நிறங்கள் இதனால் மாறுவதாகவும் மம்தா மோகன்தாஸ் குறிப்பிட்டுள்ளார். 

mamta mohan

நான் தினந்தோறும் என்னுடைய நிறத்தை இழந்து வருகிறேன் என்று பதிவிட்டுள்ள மம்தா, ஆட்டோ இம்யூன் நோய், ஆட்டோ இம்யூனிட்டி, விட்டிலிகோ, ஸ்பாட்லைட், மேக்கப் இல்லை, உங்களை நீங்களே குணப்படுத்துங்கள் போன்ற ஹேஷ்டேக்களையும் தனது பதிவுக்கு சேர்த்துள்ளார்.

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? எந்த வியாபாரம் உங்களுக்கு லாபம் தரும்!?

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்

From around the web