பிரபல சினிமா வசனகர்த்தா காலமானார்!! திரையுலகினர் அஞ்சலி!!

 
ஆரூர்தாஸ்


தமிழ் திரையுலகில் அண்ணன் தங்கை பாசத்தை கொண்டாட எத்தனையோ படங்கள் எடுக்கப்பட்டு விட்டன. ஆனால் இன்றளவும் மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றிருப்பது பாசமலர் படம் தான். இந்த படத்தின் வசனங்கள் காலத்தால் அழியா பேறு பெற்றவை. இந்த வசனங்களை எழுதியவர் பழம்பெரும் திரைப்பட வசனகர்த்தா ஆரூர்தாஸ். இவரின் எழுத்தில் உருவான படங்கள் பட்டியல் ஏராளம். அனைத்துமே ரசிகர்களால் கொண்டாடப்பட்டன. அதில் பாசமலர், பார்த்தால் பசி தீரும் குறிப்பிடத்தக்கவை. ஆரூர்தாஸ் வயது மூப்பு காரணமாக சென்னையில் உயிரிழந்தார். இவருக்கு வயது 92. 

ஆரூர்தாஸ்


ஆரூர்தாஸ் திருவாரூர் மாவட்டத்தில் பிறந்தவர். இவர்  1,000க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு வசனம் எழுதியவர். அப்போதைய முண்ணனி நட்சத்திர கதாநாயகன் படங்களுக்கு தேடப்படுகின்ற வசனகர்த்தாவாக இருந்தவர்.  இவர்  தனது ஊரான திருவாரூர் பெயரையும், தன் பெயரில் உள்ள ஏசுதாஸில் உள்ள தாஸ் என்ற பிற்பாதியையும் இணைத்து ஆரூர்தாஸ் என பெயர் வைத்துக் கொண்டார்.

ஆரூர்தாஸ்

திரையுலக வசனங்களில்  நடிகருக்கென தனிபாணி கொள்ளாமல், கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு வசனம்  எழுதிய பெருமைக்குரியவர். 
இவருக்கு வாழ்நாள் சாதனையாளருக்கு ஒவ்வொரு ஆண்டும் ஜுன் 3 அன்று 'கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருது' தமிழக அரசின் சார்பில் வழங்கப்பட்டது. இந்த விருதினை தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆரூர்தாஸ் இல்லத்திற்கே சென்று நேரடியாக வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. 

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

திகில் வீடியோ!! 5 அடி முதலையை விழுங்கிய மலைப்பாம்பு!!

வைரல் வீடியோ!! என் குளியலறைக்கு பூட்டு இல்ல!! ஜான்வி ஜாலி ரவுண்ட் அப் !!

வீடியோ!! ராஜநாகத்துடன் சண்டையிட்டு குஞ்சுகளை காத்த தாய்க்கோழி!!

From around the web