பிரபல காமெடி நடிகர் காலமானார்!! சோகத்தில் திரையுலகம்!!

 
கொச்சு

கேரளாவில் மேடை நடிகராக இருந்து பின்னர் திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்றவர் கொச்சு பிரேமன். இவருடைய இயற்பெயர் கே.எஸ்.பிரேம்குமார். இவருக்கு வயது 68 . இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இவர் நேற்று சிகிச்சை பலனின்றி காலமானார். நடிகர் கொச்சு பிரமேன் சுவாசக் கோளாறால் பாதிக்கப்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி காலமானார். நாடக கலைஞராக தனது வாழ்க்கையைத் தொடங்கிய கொச்சு பிரேமன், மஞ்சு வாரியர் மற்றும் ஜெயராம் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்த டில்லிவாலா ராஜகுமாரன் (1996) திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.
 கொச்சு

நாடக கலைஞராக தனது கலை வாழ்க்கையை தொடங்கிய கொச்சு பிரேமன் பின்னர் திரைப்படங்களில் நடிக்கத்தொடங்கினார். இவர், நகைச்சுவை நடிகராக பல திரைப்படங்களில் நடித்து உள்ளார். தொலைக்காட்சிகளில் பல மலையாள தொடர்களிலும் நடித்து உள்ளார்.1979-ல் மலையாளத் திரைப்படங்களில் அறிமுகமானார். ஆனால் அவரது முத்திரையைப் பதிக்க 90களின் இறுதி வரை காத்திருக்க வேண்டியிருந்தது

rip

.தனது வாழ்நாளில் அவர் சுமார் 250 படங்களில் நடித்துள்ளார் மற்றும் அவரது நகைச்சுவை பாத்திரங்களுக்கு பெயர் பெற்றவர். அவரது மறைவுக்கு முதல்-மந்திரி பினராயி விஜயன், எதிர்க்கட்சி தலைவர் வி.டி. சதீசன் ஆகியோர் இரங்கல் தெரிவித்து உள்ளனர். திரையுலகைச் சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

மப்பேறி தள்ளாடும் நாய்!! மதுவை குடித்ததால் பரிதாபம்!!

From around the web