பிரபல நகைச்சுவை நடிகர் மனைவி தூக்கிட்டு தற்கொலை!! அதிர்ச்சியில் திரையுலகம்!!

 
ஆஷா

பிரபல மலையாள நகைச்சுவை நடிகர்  உல்லாஸ் பந்தலத்தின் மனைவி ஆஷா . இவருக்கு வயது 38. இவர் பத்தனம்திட்டா மாவட்டம் பந்தலத்தில் உள்ள அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். உல்லாஸ் பந்தளம் அவரது மனைவி உஷாவை காணவில்லை  என  காவல்துறையில் புகார் அளித்திருந்தார். இது குறித்து  விசாரணை நடைபெற்று வந்த நிலையில்  உல்லாஸ் பந்தலத்தின் வீட்டில்  ஆஷா தூக்கில் தொங்கிய நிலையில் இருந்ததை கண்டறிந்தனர். 

ஆஷா
உல்லாஸ் பந்தளம் வீட்டில் இருந்தபோது தான்  ஆஷா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.  ஆஷாவும் அவரது குழந்தைகளும் வீட்டின் முதல் தளத்தில் தூங்க சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.உல்லாஸ் பந்தளம் திரைப்படங்களில்  வருவதற்கு முன்   தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பல நகைச்சுவை பாத்திரங்களில் நடித்து வந்தார். பாத்திரங்களை சித்தரிப்பதில் மிகவும் பிரபலமானவர்.  தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பார்வையாளர்களிடம் பெரும் வரவேற்பு பெற்ற பிறகு  மம்முட்டி நடித்த 'தெய்வத்தின் ஸ்வாந்தம் கிளீடஸ்' படத்தின் மூலம் மலையாளத் திரையுலகில் அறிமுகமானார். 

rip
'மன்னார் மத்தை பேசும் 2', 'இது தாண்டா போலீஸ்', 'காமுகி', 'கும்பரீஸ்;, 'ஹாஸ்யம்' மற்றும் 'கர்ணன் நெப்போலியன் பகத் சிங்' ஆகிய திரைப்படங்களில் இவரது நடிப்பு பலரது பாராட்டுக்களை பெற்றன. 'ஆம்பளமுக்கிலே விஷேசங்கள்' மற்றும் 'சவாரி கிரி கிரி' ஆகிய திரைப்படங்கள் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளன. இந்நிலையில் இவரது மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது மலையாளத் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவரது மறைவிற்கு திரையுலக பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!