பிரபல இயக்குநர் ,நடிகை விரைவில் திருமணம்!! வைரலாகும் இன்ஸ்டா பதிவு!!

 
ராகுல் ஸ்ரீவித்யா


பிரபல இயக்குநர் ராகுல் ராமச்சந்திரனும் நடிகை ஸ்ரீவித்யா முல்லச்சேரியும் விரைவில் திருமணம் செய்து கொள்ளபோவதாக அறிவித்துள்ளனர்.குறும்பட இயக்குநர்களில் முண்ணனியில் இருப்பவர் ராகுல் ராமச்சந்திரன். இவர் 2017ல் ‘சின் சின் சி’ என்ற குறும்பட இயக்குநராக அறிமுகமானவர். தொடர்ந்து ராகுல் இயக்கத்தில் “ நீயும் நானும் அவனும்”,  “ஆதாம்” ஆகிய குறும்படங்கள் பெரும் வரவேற்பை பெற்றன.  மலையாளத் திரையுலகில்  2019ல்  ‘ஜீம் பூம் பா’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். தற்போது சுரேஷ் கோபி நடிப்பில் ஒரு படத்தை இயக்கி வருகிறார். 


இந்நிலையில் நடிகை ஸ்ரீவித்யா முல்லச்சேரியும் ராகுல் ராமச்சந்திரனும் திருமணம் செய்து கொள்ள போவதாக அறிவித்துள்ளனர். இவர்களின் நிச்சயதார்த்தம் நாளை  ஜனவரி 22, ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து நடிகை ஸ்ரீவித்யா தனது இன்ஸ்டாகிராம் பதிவில்  “எனது சிறந்த பாதியை மிகுந்த ஆர்வத்துடன் அனைவருக்கும் அறிமுகப்படுத்துகிறேன். எங்கள் நிச்சயதார்த்தம் ஜனவரி 22, 2023 ல் நடைபெற உள்ளது. அனைவரின் பிரார்த்தனைகளும் ஆசீர்வாதங்களும் எங்களுக்குத் தேவை. அனைத்து செய்திகளுக்கும் நன்றி. எல்லோரையும் நான் மிகவும் நேசிக்கிறேன்” என பதிவிட்டுள்ளார். ஸ்ரீவித்யா  யூடியூப் சேனலில் தனது வருங்கால கணவரை அறிமுகப்படுத்தும் வீடியோவையும் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவும், பதிவும் சமூக வலைதளங்களில் பெரும் வைரலாகி வருகிறது. ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர்.


ராகுல் தன்னுடைய பதிவில் “என் ஆசை,கனவு இறுதியாக நடந்தே விட்டது.கடந்த 1,825 நாட்களாக என்னுடன் பயணித்ததற்கு மிகவும் நன்றி. அந்த நாட்களில் ஏற்ற தாழ்வுகள், சச்சரவுகள் அனைத்தும் என் இதயத்தில் என்றும் பொக்கிஷமாக வைத்திருப்பேன்.  அன்புள்ள ஸ்ரீவித்யா, நம் வாழ்வில் ஒன்றாக இருக்க நான் எதிர்நோக்குகிறேன். நான் பார்த்த எல்லா இடங்களுக்கும் இன்னும் பார்க்காத இடங்களுக்கும் வணக்கம் சொல்லுகிறேன், ஐ லவ் யூ. திருமணத்தை அறிவிக்கும் பதிவில், "மேலும் மேலும்" என பதிவிட்டுள்ளார். 
ஸ்ரீவித்யா சின்ன திரையில் ஸ்டார் மேஜிக் நிகழ்ச்சி மூலம் பிரபலமாகி  கேம்பஸ் டைரி படத்தின் மூலம் அறிமுகமானார். ஒரு குட்ட நாடன் வலைப்பூ, ஒரு பழைய வெடிகுண்டு கதை, நைட் டிரைவ்., சத்யம் சாஹி போதிபச்சு  படங்களில் அவரின் நடிப்பு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

From around the web