பிரபல பாடலாசிரியர் காலமானார்!! அதிர்ச்சியில் திரையுலகம்!!

 
பீயார் பிரசாத்

மலையாள திரையுலகில் பிரபல இசையமைப்பாளர்களில் ஒருவர்  பீயார் பிரசாத். இவர் 1961-ல் குட்டநாடு மான்கொம்பு கிராமத்தில் பிறந்தவர்.  பீயார் பிரசாத், கதகளி நடனத்திற்காக பல லிப்ரெட்டோக்களை எழுதியுள்ளார். 1993ல் ஜானி படத்திற்காக திரைக்கதை எழுதினார். இது சிறந்த குழந்தைகள் திரைப்படத்திற்கான கேரள மாநில திரைப்பட விருதை வென்றது.

பீயார் பிரசாத்

2001ல் ஜெயராம் மற்றும் சுஹாசினி நடித்த தீர்த்ததானம் படத்தில் நாராயணன் என்ற கதாபாத்திரத்தில் பிரசாத் நடித்தார்.2003ல் பிரியதர்ஷன் இயக்கத்தில் வெளியான ‘கிளிச்சுண்டன் மாம்பழம்’ படத்தின் மூலம் மலையாளத் திரையுலகில் அறிமுகமானார். இந்த படத்திற்கு வித்யாசாகர் இசையமைத்துள்ளார். இவர் திலீப், மோகன்லால் படங்கள் உட்பட 60க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ளார்.

rip

தமிழில் இளையராஜா இசையில் ”ட்விங்கிள் ட்விங்கிள் லிட்டில் ஸ்டார்” படத்தில் ஒரு பாடலை எழுதியுள்ளார். பீயார் பிரசாத் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மூளைச்சாவு அடைந்து சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. அவர் 2019 ல் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார்.
இந்நிலையில், நேற்று திடீரென உயிரிழந்தது திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவரது மறைவுக்கு திரையுலகினர்  உட்பட  பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

From around the web