பிரபல இசையமைப்பாளர் மனோரஞ்சன் பிரபாகர் காலமானார்!! சோகத்தில் திரையுலகம்!!

 
மனோரஞ்சன் பிரபாகர்

 கன்னட திரையுலகின் பழம்பெரும் இசையமைப்பாளர் மனோரஞ்சன் பிரபாகர். இவர் கடந்த சில காலமாகவே உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். 1970களில் திரையுலகில் அடியெடுத்து வைத்த மனோ ரஞ்சன் இதுவரை சுமார் 800க்கும் மேற்பட்ட ஆல்பங்களை வெளியிட்டுள்ளார்.

மனோரஞ்சன் பிரபாகர்

இவரின் இசையில் 'சமத்காரா', 'நியாயக்டி சவால்', 'ஜன சோகிடா சன்', 'கிளி வேட்டை', 'நானகு ஹெண்டி வாடு', 'அசோக சக்ரா', 'நீனே நன்னா ஜீவா'  ஆகிய படங்களுக்கு இசையமைத்தவர். 'தற்றே நன்மகா', 'சீதா ஆஞ்சநேயா' போன்ற படங்களிலும், 'கண்டக்டர் கரியப்பா' சீரியல்களிலும் தலைகாட்டியுள்ளார். சின்னத்திரை நடிகர், இசையமைப்பாளர், பாடகர் என பன்முக திறமை வாய்ந்தவர். இசைக்குழுவை உருவாக்கி பல்வேறு நிகழ்ச்சிகளை வழங்கி வந்தார்.

rip

1990களில்  ஆதர்ஷ் ஃபிலிம் இன்ஸ்டிடியூட்டில் ஆசிரியராக இருந்து திறமை வாய்ந்த மாணாக்கர்களை திரையுலகிற்கு தந்தார். அத்துடன் இவரது முயற்சியால் ஸ்ருதிலயா இன்ஸ்டிடியூட் ஆப் மியூசிக்  உருவாக்கப்பட்டது. இதன் மூலம் இசையில்  ஆர்வமுள்ளவர்களுக்கு இசைப் பயிற்சி அளித்து வந்தார். அத்துடன் பக்தி, நாட்டுப்புற மற்றும் தேசபக்தி பாடல்களுக்கும் இசையமைத்து நீங்கா புகழ் பெற்றார். மனோரஞ்சன் பிரபாகர் மறைவுக்கு திரையுலக பிரபலங்கள்  பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

மப்பேறி தள்ளாடும் நாய்!! மதுவை குடித்ததால் பரிதாபம்!!

From around the web