பிரபல இளம் நடிகர் தூக்கிட்டு தற்கொலை! காதல் தோல்வி காரணமா?! திரையுலகினர் அதிர்ச்சி!

 
சுதிர் வர்மா

தெலுங்கு திரையுலகம் மொத்தமும் அதிர்ந்து போயிருக்கிறது. இப்போது தான் பஞ்சாயத்துகள் தீர்ந்து வருகின்ற நிலையில், இன்று விசாகப்பட்டினத்தில் உள்ள தனது வீட்டில் பிரபல தெலுங்கு திரையுலகின் இளம் நடிகர் சுதீர் வர்மா தூக்கிட்டு தற்கொலைச்  செய்துக் கொண்ட செய்தி, பெரும் பதற்றத்தையும் தெலுங்கு திரையுலகினரிடையே ஏற்படுத்தியுள்ளது. 

நடிகர் சுதிர் வர்மா மறைவுக்கு பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். நடிகர் சுதீர் வர்மாவின் தற்கொலைக்கான காரணங்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். நடிகர் சுதிர் வர்மா, கடந்த 2013ம் ஆண்டு வெளியான ‘சுவாமி ரே ரே’ என்ற படத்தில் நடித்துள்ளார். அதனைத் தொடர்ந்து கிஷோர் திருமலா இயக்கிய ‘செகண்ட் ஹேண்ட்’ திரைப்படம் அவருக்கு நல்ல பெயரைப் பெற்றுத் தந்தது.

அதன்பின், 2016-ல் வெளியான ‘குண்டனபு பொம்மா’ படத்தில் முன்னணி நடிகர்களில் ஒருவராக நடித்தார். லைஃப் இஸ் பியூட்டிபுல் புகழ் சுதாகர் கோமகுலா, சாந்தினி சவுத்ரி இப்படத்தில் மற்ற முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மேலும், ஷூட்அவுட் அட் அலேரு போன்ற வெப் சீரிஸ் தொடரில் சுதிர் வர்மா நடித்துள்ளார். இதனை சிரஞ்சீவியின் மகள் சுஷ்மிதா கொனிடேலா தயாரித்த வெப் சீரிஸ் ஆகும். இந்த வெப் சீரிஸும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

Sudeer varma

இந்நிலையில், சுதீர் வர்மா விசாகப்பட்டினத்தில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள் அந்த விசாரணையில் இவருக்கு பல விதமான சொந்த காரணங்கள் இருந்துள்ளது.


அதனால் மனமுடைந்த நடிகர் சுதீர் வர்மா விசாகப்பட்டினத்தில் உள்ள அவருடைய சொந்த வீட்டில் தற்கொலை செய்து கொண்டார் என தகவல் வெளியாகியுள்ளது. இவருடைய மறைவுக்கு பிரபலங்கள் மற்றும் ரசிகர்களும் தங்களின் இரங்கலை பதிவிட்டு வருகின்றனர்.

இளம் நடிகர் சுதீர் வர்மா தற்கொலை செய்து கொண்டார் அதற்கான காரணம் என்ன என்பதனை விரைவில் கண்டறியப்படும் என போலீசார் தரப்பில் கூறப்படுகின்றது.சமீப காலமாக திரைத்துறையினர் தற்கொலை செய்து கொள்வது அதிகரித்து வருகின்றது என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

From around the web