மாரடைப்பால் ரசிகர் மரணம்! சென்னை திரும்பியதும் வீடு தேடிச் சென்ற நடிகர் கார்த்தி!

 
கார்த்தி

‘பொன்னியின் செல்வன்’ படத்தில் நடிகர் கார்த்தியின் நடிப்பு பேசப்பட்டாலும், ஆயிரத்தில் ஒருவனிலும், பருத்தி வீரனிலும் பார்த்த அதே ஸ்டைல் என்று விமர்சனம் பரவலாக எழுந்தது. அதற்கு முன்பு கார்த்தி நடித்த படங்களில் கடந்தாண்டு ‘விருமன்’ ப்ளாப் படமாக அமைந்தது. ‘சர்தார்’ படமும் பேசும் படியாக கலெக்‌ஷன் இல்லை. இதனால் ஒரு ஹிட் தர வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் கார்த்தி, தற்போது ராஜூ முருகனின் இயக்கத்தில் ‘ஜப்பான்’ படத்தில் நடித்து வருகிறார்.

கார்த்தி

இந்நிலையில், ‘ஜப்பான்’ படத்தின் ஷூட்டிங்கிற்காக வெளியூர் சென்றிருந்த கார்த்தி, சென்னை திருவான்மியூரைச் சேர்ந்த தனது ரசிகர் வினோத் மாரடைப்பால் மரணமடைந்த செய்தி கேட்டு கலங்கினார். 29 வயதேயான வினோத் மாரடைப்பால் உயிரிழந்தது நடிகர் கார்த்தியின் மனசை பிசைந்துள்ளது. 

கார்த்தி

கடந்த இரு தினங்களுக்கு  முன்பாக சென்னை திரும்பிய கார்த்தி, இன்று திருவான்மியூரில் உள்ள வினோத்தின் வீட்டுக்கு நேரில் சென்ற, புகைப்படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். வினோத்தை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார். 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்!

From around the web