தெறிக்க விட்ட ரசிகர்கள்! அஜித்தின் ‘துணிவு’ யூ ட்யூப்ல 19 மில்லியன் பார்வைகள்!

 
அஜித் துணிவு

’துணிவு’ ட்ரெய்லரை அஜித் ரசிகர்கள் தெறிக்க விட்டுள்ளனர்.  யூ-ட்யூப்ல 19 மில்லியனைக் கடந்து பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. அஜித் ரசிகர்களின் ஆல் டைம் பேவரைட் படமாக ‘துணிவு’ இருக்கும் என்று கொண்டாடி வருகிறார்கள். புத்தாண்டு கொண்டாட்டத்தோடு சேர்ந்து துணிவு ட்ரைலர் கொண்டாட்டம் என டபுள் கொண்டாட்டமாக அஜித் ரசிகர்களுக்கு நேற்றைய இரவு கொண்டாட்டம் அமைந்தது.

அதிலும், ‘என்னை  மாதிரி... அயோக்கிய பையன்  மேல... கைய வைக்கலாமா?’  என்று செம மாஸான பஞ்ச் வசனத்தை இணையதளங்களில் வைரலாக்கி, விஜய்யையும், தில் ராஜூவையும் வம்பிழுத்து வருகிறார்கள்.

அஜித்தின் துணிவு ட்ரைலரை வைரலாக்கி வரும் ரசிகர்கள், விஜய் ரசிகர்களையும் கலாய்த்து வருகிறார்கள். ‘வலிமை’ படத்தை தொடர்ந்து நடிகர் அஜித்குமார் மீண்டும் இயக்குநர் எச்.வினோத்துடன் இணைந்துள்ள படம் ‘துணிவு’. இந்த படத்தில் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


போனி கபூர் தயாரித்துள்ள இந்த படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் பெற்றுள்ளது. பொங்கலுக்கு படம் வெளியாக உள்ள நிலையில் அடுத்தடுத்து பட அப்டேட்களை வெளியிட்டு வருகின்றனர்.

இந்நிலையில், இப்படத்தின் கதாப்பாத்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. அதன் படி பத்திரிகையாளர் மைபா நாராயணன் கதாபாத்திரத்தில் பட்டிமன்ற பேச்சாளர் மோகன சுந்தரம் நடித்துள்ளார். நடிகர் பிரேம், பிரேம் என்ற தனது சொந்தப் பெயரிலேயே நடித்திருக்கிறார்.

மேலும் நடிகர் பக்ஸ், ராஜேஸ் என்ற வேடத்திலும், நடிகர் ஜான் கொக்கென், கிரிஷ் என்ற வேடத்திலும் ராஜதந்திரம் உள்ளிட்ட படங்களில் ஹீரோவாக நடித்த வீரா, ராதா என்ற வேடத்திலும் நடிகர் ஜிஎம் சுந்தர் முத்தழகன் என்ற வேடத்திலும் தெலுங்கு நடிகர் அஜய், ராமசந்திரன் என்ற வேடத்திலும் நடித்துள்ளனர்.

Thunivu

பிரபல நடிகர் சமுத்திரக்கனி இந்தப் படத்தில் தயாளன் என்ற காவல் அதிகாரி வேடத்தில் நடித்திருக்கிறார். நடிகை மஞ்சுவாரியர் கண்மணியாக நடித்திருக்கிறார். தொடர்ந்து தயாரிப்பு நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில், அஜித்தின் படத்தைப் பகிர்ந்து அவரது பெயர் என்ன என்று யூகித்து சொல்லுங்கள் என ரசிகர்களிடம் கேட்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து ‘துணிவு’ படத்தின் டிரெய்லர் நேற்றிரவு 7 மணிக்கு வெளியான நிலையில், ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் ட்ரைலரை தெறிக்க விட்டு, யூ-ட்யூப்பில் 19 மில்லியனை  வியூவ்ஸை அள்ளி தந்திருக்கிறார்கள். இன்று இரவு 7 மணிக்குள் கூடுதலான பார்வையாளர்களைப் பெற்று, துணிவு படத்தின் ட்ரைலர் ஆல் டைம் ரெக்கார்ட்  படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

From around the web