பெண் தலைமைக் காவலர் விபத்தில் பலி!! உதவிக்கு சென்ற போது சோகம்!!

 
ஷீலா

பொங்கல் விடுமுறை காரணமாக பொதுமக்கள் பாதுகாப்பு கருதி தமிழகம் முழுவதும் முக்கிய பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். அந்த வகையில் பெண் தலைமை காவலர் ஷீலா குரோம்பேட்டை பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். பணி முடிந்ததும் தனது பைக்கில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.அப்போது விபத்து ஏற்பட்டதில் படுகாயம் அடைந்தார். உடனடியாக உதவிக்கு  ஜெபமணியை அழைத்துள்ளார்.

விபத்து

விபத்து நடந்த பகுதிக்கு ஷீலா ஜெபமணி செல்லும்போது, அவரது வாகனத்தின் மீது பின்னால் வந்த கார் அதி வேகத்தில் மோதியது. இதனால் நிலைதடுமாறி விழுந்தார்.  தலையில் பலத்த காயமடைந்ததால் உடனே  சுயநினைவை இழந்தார்.
அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு  குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கே அவருக்கு தலையில் 7 தையல்கள் போட்டும், மயக்கம் தெளியவில்லை. உயர்சிகிச்சைக்காக  சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு  சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்தார்.

இளம் நடிகர் கைது

இவ்விபத்து குறித்து  வழக்கு பதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதில்  விபத்தை ஏற்படுத்திய  கார் ஓட்டுநர் பல்லாவரத்தில் வசித்து வரும் சக்தியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.  பாதுகாப்பு பணிக்கு சென்ற தலைமைக்காவலர் உயிரிழந்த இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!

From around the web