தனியார் தொழிற்சாலையில் கோர தீ விபத்து!! 36 பேர் உடல் கருகி பலி!! 2 பேர் கவலைக்கிடம்!!

 
சீனாவில் தீ


சீனாவின் ஹெனான் மாகாணத்தில் தொழிற்சாலையில் பயங்கர தீவிபத்து   ஏற்பட்டுள்ளது. அன்யாங் நகரில் அமைந்துள்ள தனியார் தொழிற்சாலையில் நேற்று நவம்பர் 21ம் தேதி திங்கட்கிழமை திடீரென தீவிபத்து ஏற்பட்டது.  

தீவிபத்து

உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறை 63 வாகனங்களில் வந்து போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தது. இன்று அதிகாலை வரை எரிந்து கொண்டிருந்த தீயை தற்போது முற்றிலுமாக அணைத்துள்ளனர். இந்த கோர தீவிபத்தில் இதுவரை 36 பேர் பலியாகி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தீவிபத்து

 2 பேர் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் அவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது . அத்துடன் மேலும் 2 பேரை காணவில்லை. அவர்களை மீட்கும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. 

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

மப்பேறி தள்ளாடும் நாய்!! மதுவை குடித்ததால் பரிதாபம்!!

From around the web