டிசம்பர் 16ம் தேதி வரை விமான சேவைகள் ரத்து!! பயணிகள் கடும் அவதி!!

 
விமானம்

தமிழகத்தின் தலைநகரமாம் சென்னையில் செயல்பட்டு வரும் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து உலகம் முழுவதும் விமான சேவை இயக்கப்பட்டு வருகிறது. இதில் சென்னையிலிருந்து  அந்தமானுக்கும் விமான சேவை செயல்பட்டு வருகிறது. டிசம்பர் 16ம் தேதி வரை சென்னையில் இருந்து அந்தமான் செல்லும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதே நேரத்தில் அந்தமானில் இருந்து சென்னை வரும் 7 விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

விமானம் விமான நிலையம்

அந்தமான் விமான நிலையத்தில் ஓடுபாதைகள் பராமரிப்பு பணி நடைபெற்று வருகிறது. இதனால் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக விமானநிலைய அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். ஏற்கனவே நவம்பர் 1 முதல் 4ம் தேதி வரை மற்றும் 15 முதல் 18ம் தேதி வரை , நவம்பர் 29 முதல் டிசம்பர் 2 வரையிலும் என 3 முறைகள் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.  அதன் தொடர்ச்சியாக தற்போது  4வது முறையாக நேற்று டிசம்பர் 13 முதல் டிசம்பர் 16 வரை  4 நாட்கள் மீண்டும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

விமான நிலையம்

அந்தமான் விமான நிலையத்தில் ஓடுபாதை பராமரிப்பு பணிகள் நடந்து வருவதால், விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், மீண்டும் விமான சேவைகள் டிசம்பர் 17 ம் தேதி முதல் வழக்கம் போல் தொடரும் எனவும் விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  மேலும் அந்தமான விமான சேவைகள் கடந்த ஒன்றரை மாதத்தில் மட்டும் மொத்தம்  16 நாட்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இது குறித்து பயணிகளுக்கு முன்னதாகவே முறையான அறிவிப்பு எதுவும் செய்யப்படவில்லை. இதனால் அந்தமான் செல்லும் விமானப்பயணிகள், அங்கிருந்து சென்னை திரும்புபவர்கள் கடும் அவதிக்குள்ளாகினர் என்பது குறிப்பிடத்தக்கது. 

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

மப்பேறி தள்ளாடும் நாய்!! மதுவை குடித்ததால் பரிதாபம்!!

From around the web