அடி தூள்!! சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு!! ரயில் பயணிகள் உற்சாகம்!!

 
ரயில்

சாதாரண நாட்களில் இயக்கப்படும் ரயில் சேவைகள் தவிர்த்து பயணிகளின் தேவைகள், பண்டிகை காலங்களில் சிறப்பு ரயில் சேவைகள் இயக்கப்படுவதுண்டு. சில சேவைகள் வாரத்தில் சில நாட்கள் பயணிகள் தேவைகள் அதிகரிக்கும் நாட்கள் அதாவது வார இறுதி நாட்கள் மட்டும் இயக்கப்படுவதுண்டு. பயணிகள் தொடர் கோரிக்கையால் அந்த ரயில்களின் சேவை நீட்டிக்கப்படுவதும் உண்டு. 

தென்மாவட்ட ரயில்களில் நேர மாற்றம்! ரயில் பயணிகளே குறிச்சி வைச்சிக்கோங்க!

அந்த வகையில் ரயில் எண். 06035 எர்ணாகுளம் - வேளாங்கண்ணி சந்திப்பு வாராந்திர சிறப்பு ரயில் சனிக்கிழமைகளில் மதியம் 01.10 மணிக்கு எர்ணாகுளத்தில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 05.40 மணிக்கு வேளாங்கண்ணியை சென்றடையும் இந்த ரயில் சேவை கூடுதலாக பிப்ரவரி 04, 11, 18 மற்றும்  25, 2023 ஆகிய தேதிகளில் இயக்கப்படும் ( 4 சேவைகள்)


அதேபோல், ரயில் எண். 06036 வேளாங்கண்ணி - எர்ணாகுளம் சந்திப்பு வாராந்திர சிறப்பு ரயில் ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை 06.40 மணிக்கு வேளாங்கண்ணியில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 11.40 மணிக்கு எர்ணாகுளத்தை சென்றடையும் இந்த ரயில் சேவை கூடுதலாக பிப்ரவரி 05, 12, 19 மற்றும் 26 ஆகிய தேதிகளில் இயக்கப்படும்.

ரயில்

அருப்புக்கோட்டை வழியான எர்ணாகுளம் - வேளாங்கண்ணி - எர்ணாகுளம் சிறப்பு ரயில் மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டிக்கப்பட்டுளளது. இந்த ரயில் பயணிகளின் பேராதரவுடன் தொடர்ந்து இயங்கி வருகிறது. விரைவில் நிரந்தரமாக  வாரமிருமுறை ரயிலாக இயங்க தொடர்ந்து இயக்க தொடர் முயற்சிகள் மேற்கொள்வோம் என ரயில் பயணிகள் தெரிவித்துள்ளனர். .

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

From around the web