அடி தூள் !! மிக விரைவில் விளம்பரமே இல்லாத ட்விட்டர்!! பயனர்கள் உற்சாகம்!!

 
எலான் மஸ்க்

எலான் மஸ்க் ட்விட்டரை கையகப்படுத்தியதில் இருந்து அடுத்தடுத்த அதிரடி அறிவிப்புக்களை வெளியிட்டு வருகிறார்.  மாதாந்திர கட்டணம், ப்ளூ டிக்கிற்கு தனி கட்டணம், ஆரஞ்சு  , மஞ்சள் என வண்ண வண்ண டிக்குகள், விளம்பரத்துடன் ட்விட்டர், விளம்பரமில்லாத டிவிட்டர் இவைகளுக்கு நடுவில் பணியாளர்கள் குறைப்பு, சேவைக்கட்டணம் என பலப்பல அறிவிப்புக்கள். தினமும் அவருடைய அடுத்த அறிவிப்பு என்னவாக இருக்குமோ என பயனர்களும், ஊழியர்களும் கலக்கத்தில் இருந்து வருகின்றனர்.

எலான் மஸ்க்

அமெரிக்காவை தலைமையிடமாக கொண்ட சமூகவலைதளமான டிவிட்டரை  உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான  எலான் மஸ்க் 2022 அக்டோபரில் கையகப்படுத்தினார். வாங்கிய நாள் முதல் ட்விட்டர் நிறுவனம் வெறும்  வருவாய் விளம்பரத்தை மட்டுமே நம்பி இருக்க கூடாது என்பதை கருத்தில் கொண்டு திட்டங்களை வகுத்து அதனை செயல்படுத்தி வருகிறார்.  அத்துடன்  பயனர்களின் நம்பகத்தன்மையை உறுதி செய்யும் வகையில், ப்ளூடிக் சேவைக்கு கட்டணம்,  ஊழியர்கள் பணிநீக்கம் என அதிரடி காட்டி வந்தார்.

எலான் மஸ்க்

இந்நிலையில், எலான் மஸ்க்கின் புதிய அறிவிப்பின் படி  தனது டுவிட்டர் பக்கத்தில், "ட்விட்டரில் விளம்பரங்கள் மிகவும் பெரிய அளவிலும், அடிக்கடியும் வருகின்றன. வரும் வாரங்களில் இந்த இரண்டு பிரச்சினைகளுக்கும் உரிய தீர்வு காணநடவடிக்கை எடுக்கப்படும்." என பதிவிட்டுள்ளார்.  மிக விரைவில் விளம்பரம் இன்றி டுவிட்டர் தளத்தை அணுகும் வகையில் புதிய சந்தாதாரர் திட்டத்தை அறிமுகப்படுத்தப்படும் எனவும் அதிகாரப்பூர்வ வட்டாரத்தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

From around the web