அடி தூள்!! நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!! கொண்டாடுங்க மாணவர்களே!!

 
விடுமுறை

இன்று ஜனவரி 26 குடியரசு தின விழா இந்தியா முழுவதும்  கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்காக பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு வழக்கம் போல் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பொது மற்றும் அரசு விடுமுறை தவிர உள்ளூர் விழாக்கள், பண்டிகைகள் அடிப்படையில் விடுமுறை அளிக்கப்படுவதும் உண்டு. அந்த வகையில் நாளை திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். முருகனின் அறுபடை வீடுகளில் 3 வது படை வீடு பழனி தண்டாயுதபாணி திருக்கோவில்.  அருணகிரிநாதர் திருப்புகழிலும், நக்கீரர் திருமுருகாற்றுப்படையிலும் கசிந்துருகி பாடிய திருத்தலம்.  

உள்ளூர் விடுமுறை

வருடத்தின் அனைத்து நாட்களுமே உற்சவங்கள் களைகட்டும் கோவில். நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை ஜனவரி 27ம் தேதி பழனி  தண்டாயுதபாணி திருக்கோவிலில் குடமுழுக்கு நடைபெற உள்ளது. இதனை நேரில் காண பக்தர்களின் வசதிக்காக தமிழகம் முழுவதிலும் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அரசு பேருந்து போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.  மேலும் இருந்த இடத்தில் இருந்தே தரிசிக்கவும் பழனி  கோவிலில் இருந்து, பேருந்து நிலையம் வரை எல்இடி திரை அமைக்கும் சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.  இதனை நேரில் காண விரும்பும் பக்தர்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பங்களும் வெளியிடப்பட்டுள்ளன. இதுவரை  ஆன்லைனில் ல் 47,000 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதில் குலுக்கல் முறையில் 2000 பக்தர்கள் மட்டும் தேர்ந்தெடுக்கப்பட  உள்ளனர்.

பழனி

இங்கு 16 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பாபிஷேகம் நடைபெற இருப்பதால் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் எதிர்பார்த்துள்ளது.  ஜனவரி 27ம் தேதி திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளாது.

இது குறித்து கலெக்டர் வெளியிட்ட செய்திக்குறிப்பில்  திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு நாளை  ஜனவரி 27ம் தேதி வெள்ளிக்கிழமை அன்று திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் பள்ளி கல்லூரிகள் கல்வி நிறுவனங்கள் அரசு அலுவலகங்கள் ஆகியவற்றிற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஈடு செய்யும் விதமாக  பிப்ரவரி 25ம் தேதி சனிக்கிழமை பணிநாளாக செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

From around the web