அடி தூள் !! இனி வாட்ஸ் அப் மூலம் மெட்ரோ ரயில் டிக்கெட்!!

 
மெட்ரோ  வாட்ஸ் அப்

சென்னை முழுவதும் மெட்ரோ ரயில் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.இன்னும் சில மாதங்களில்  சென்னையின் அனைத்து பகுதிகளும்  மெட்ரோ மூலம் இணைக்கப்பட்டு விடும். மெட்ரோ தொடங்கப்பட்ட போது பயணக்கட்டணம் அதிகம். மெட்ரோ ரயில் நிலையங்கள் ஆள்நடமாட்டமின்றி உள்ளன. டிரெயினுக்காக நிறைய நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது எனப் பலவித விமர்சனங்கள் எழுந்தன. மேலும் இதில் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கையும் குறைவாகவே இருந்து வந்தது. தற்போது பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து இருப்பதால் 3 நிமிடங்களுக்கு ஒரு ரயில் சேவை இயக்கவும் மெட்ரோ ரயில் நிர்வாகம் பரிசீலித்து வருகிறது. 

மெட்ரோ


இதில் பயணம் செய்பவர்களின் வசதியை அடிப்படையாகக் கொண்டும், தொழில்நுப்ட அடிப்படையில் மேம்படுத்தவும் மெட்ரோ நிர்வாகம் பல செயல்பாடுகளை நடைமுறைப்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக மொபைலில் வாட்ஸ் அப்  செயலி மூலம் மெட்ரோ ரயில் டிக்கெட்டை எடுத்துக்கொள்ளும் வகையில்  புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சென்னை மெட்ரோ ரயிலில் பயணம் செய்ய ரயில் நிலையங்களில் அமைக்கப்பட்டிருக்கும்  டிக்கெட் கவுண்டர்களின் நேரடியாகவோ அல்லது பயண அட்டை மூலமாகவோ அல்லது க்யூ ஆர் கோடு மூலமாவோ கட்டணம் செலுத்த வேண்டும் .

வாட்ஸ் அப்

இந்த நடைமுறை தான் தற்போது வரை வழக்கத்தில் இருந்து வருகிறது. இதனை மேலும் எளிதாக்கவும், பயணிகளின் வசதிகளுக்காகவும் மெட்ரோ ரயில்  நிர்வாகம்  வாட்ஸ் அப் செயலி மூலம் கட்டணம் செலுத்தி மெட்ரோ ரயில் டிக்கெட் எடுத்துக்கொள்ளலாம் என அறிவித்துள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் அதை தொடர்ந்த நடவடிக்கையும் மிக விரைவில் செயல்படுத்தப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.இந்த தகவல் ரயில் பயணிகளிடையே மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

மப்பேறி தள்ளாடும் நாய்!! மதுவை குடித்ததால் பரிதாபம்!!

From around the web