அடி தூள்.. இனி ஏமாற்ற முடியாது.. ! எடைக்குள் அகப்பட்டது முட்டை விலை! அசைவ ப்ரியர்கள் மகிழ்ச்சி!

 
முட்டை

தேசிய முட்டை ஒருங்கிணைப்பு மையத்தின் நாமக்கல் மண்டல தலைவர் டாக்டர் செல்வராஜ் அறிக்கையில் கூறியிருப்பதாவது வரும் ஜனவரி 15 முதல், ஏற்றுமதி தரம் அளவுள்ள முட்டை (பெரிய முட்டை) என்று இதுவரை இருந்த நடைமுறை மாற்றப்பட்டு 50 கிராமுக்கும் அதிகமான அனைத்து முட்டைகளும் 'பெரிய முட்டை' என்று விற்கப்படும். 45 கிராம் முதல் 49 கிராம் வரையுள்ள முட்டைகள் ஒரே விலையில் விற்கப்படும். 

முட்டை

40 கிராம் முதல் 44 கிராம் வரை உள்ள முட்டைகள் ஒரே விலையில் விற்கப்ப டும். இந்த முடிவுகளை நடைமுறைப்படுத்தும் நோக் கில் வரும் நாட்களில் நாமக்கல் மண்டலத்துக்கு உட்பட்ட பல்லடம், ஈரோடு, மோகனுார், பரமத்தி, புதன் சந்தை, ராசிபுரம் மற்றும் நாமக்கல் வட்டார குழு தலைவர்கள் அந்தந்த வட்டாரத்துக்குட்பட்ட கோழிப் பண்ணையாளர்களை அழைத்து ஒரு கூட்டம் ஏற்பாடு செய்து, அதில் மேற்கூறியவாறு எடுக்கப்பட்ட முடிவுகளை கண்டிப்பாக நடைமுறைப்படுத்த அறிவுறுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 2022ல், முட்டையின் ஆண்டு சராசரி விலை 4.55 காசு என்று இருந்தாலும், பண்ணையாளர்களுக்கு கிடைத்த விலை இதிலிருந்து குறைந்தபட்சம் 45 முதல் 50 காசுகள் குறைவாகவே கிடைத்திருக்கும். எனவே, பண்ணையாளர்களுக்கு கடந்த ஆண்டில் கிடைத்த சராசரி விலை ரூபாய் 4.10 காசுகள் மட்டுமே. இது கடந்த ஆண்டின் முட்டையின் உற்பத்திச்செலவு சராசரியை விட குறைவாகும். இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

முட்டை விலை திடீர் உயர்வு

ஆகவே மக்கள் தான் இனி மகிழ்ச்சியடைவார்கள். என்னையா முட்டை இவ்வளவு சிறுசா இருக்கு? எனக் கேட்டால் கடைக்கார்கள், ஏம்மா முட்டை நானா போடுறேன்.. கோழி விடுது என பழி போட முடியாது. முட்டையை இனி எடை தான் போட முடியும்.

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

From around the web