அடி தூள்.. தொடர் கொண்டாட்டம்... ஜனவரி 3ம் தேதி உள்ளூர் விடுமுறை! கலெக்டர் உத்தரவு!

 
பள்ளி கல்லூரி விடுமுறை school holiday

இன்று புத்தாண்டு தினத்தையொட்டி தமிழகம் முழுவதும் நள்ளிரவில் இருந்தே மக்கள் ஆர்வமுடன் கொண்டாடி வருகின்றனர். இன்று அதிகாலையில் இருந்தே வழிப்பாட்டு தலங்களில்  பக்தர்களின் கூட்டம் அதிகளவில் வரிசையில் நின்று வழிபட்டனர். இந்நிலையில், ஜனவரி 3ம் தேதி நாகூர் தர்காவின் 466வது கந்தூரி விழாவை முன்னிட்டு நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து அம்மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். நாகப்பட்டினத்தில்  அமைந்துள்ள நாகூர் தர்கா, உலக பிரசித்தி பெற்றது. நாகூர் தர்காவில்,  ஒவ்வொரு ஆண்டும் கந்தூரி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.  அந்த வகையில் நடப்பாண்டில் நாகூர் ஆண்டவர் தர்காவின் 466ம் ஆண்டு கந்தூரி விழா ஜனவரி 3ம் தேதி கொண்டாடப்பட உள்ளது.

உள்ளூர் விடுமுறை

10 நாட்களுக்கு தொடர்ந்து கொண்டாடப்படும் இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக தமிழகம் முழுவதிலும் இருந்து  ஏராளமான பக்தர்கள் நாகப்பட்டினத்திற்கு வருவார்கள். வாழை மரங்கள், தோரணங்கள், வண்ண விளக்குகள் என அப்பகுதி முழுவதுமே சிறப்பான  அலங்காரங்களால் புத்தாண்டில் இருந்தே ஜொலிக்கின்றன. விழாவின் சிகர நிகழ்ச்சியான சந்தனக்கூடு ஊர்வலம் நாளை  ஜனவரி 2ம் தேதி  நடத்தப்படுகிறது.

நாகப்பட்டினம்

பின்னர் ஜனவரி 3ம் தேதி பெரிய ஆண்டவருக்கு சந்தனம் பூசும் திருவிழா நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்ள இந்தியா முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள். இதனை கருத்தில் கொண்டு ஜனவரி 3ம் தேதி நாகை மாவட்டத்திற்கு  உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ்  பிறப்பித்துள்ளார். இந்த விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக ஜனவரி 21ம் தேதி வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

From around the web