முன்னாள் அமைச்சர் காலமானார்!! முதல்வர்,ஆளுநர் இரங்கல்.!!

 
நஸ்ருல்


அஸ்ஸாம் மாநிலத்தின் முன்னாள் அமைச்சர் நஸ்ருல் இஸ்லாம். இவருக்கு வயது 73. இவர் வயது மூப்பு மற்றும் உடல் நலக்குறைபாடு காரணமாக உயிரிழந்தார். 
 காங்கிரசின் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான நஸ்ருல் இஸ்லாம் கடந்த சில நாட்களாகவே , உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

நஸ்ருல்

மருத்துவ வல்லுனர்கள் குழு தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு காலமானார்.  இவர் இதுவரை 3 முறை அமைச்சராகவும், 5 முறை எம்.எல்.ஏ. வாகவும்  பதவி வகித்தவர். இவருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

rip

மறைந்த முன்னாள் முதல்வர் தருண் கோகோய் அமைச்சரவையில் 2002 முதல் 2016 வரை உணவு மற்றும் சிவில் சப்ளை, சிறுபான்மை விவகாரங்கள் மற்றும் சுகாதாரத் துறைகளில் 3 முறை அமைச்சராக இருந்தவர். இவரது மகன் டாக்டர் ஆசிப் முகமது நாசர் 2021 ல் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். டாக்டர் நஸ்ருல் இஸ்லாத்தின் மறைவுக்கு அஸ்ஸாம் மாநில முதல்வரும் ,  ஆளுநரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். இது குறித்து  ஆளுநர் வெளியிட்ட அறிக்கையில், சட்டமன்ற உறுப்பினராகவும், அமைச்சராகவும் பணிபுரிந்த  டாக்டர் நஸ்ருல் இஸ்லாமின் மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு. மாநிலத்தின் சமூக-அரசியல் துறையில் அவரது நீண்ட மற்றும் மதிப்புமிக்க சேவைகள் நீண்ட காலமாக  நினைவுகூரப்படும் என தெரிவித்துள்ளார்.இவரின்  மறைவிற்கு அரசியல் தலைவர்கள், பிரபலங்கள், தொண்டர்கள்  இரங்கலை பதிவிட்டு வருகின்றனர். 

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

From around the web