டிசம்பர் 21 முதல் இலவச பயண பேருந்து டோக்கன்கள்!! ஜாலி ரவுண்ட்ஸ்!!

 
இலவச பேருந்து பயண டோக்கன்

தமிழகத்தில் பெண்கள், குழந்தைகள் , மாற்றுத்திறனாளிகள் இலவசமாக பயணிக்கலாம் என தமிழக  அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இத்துடன்  மூத்த குடிமக்கள் பேருந்துகளில் கட்டணமில்லாமல் பயணம் செய்வதற்கான பேருந்து  பயண டோக்கன்களும் ஒவ்வொரு மாதமும் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் அடுத்த 6 மாத காலத்திற்கான டோக்கன்கள் டிசம்பர்  21ஆம் தேதி முதல் வழங்கப்பட உள்ளதாக மாநகர போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.

இலவச பேருந்து பயண டோக்கன்

 இது குறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்  மாநகர் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் 60 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் கட்டணமில்லாமல் பயணம் செய்வதை உறுதி செய்யும் வகையில், கட்டணமில்லா பேருந்து பயண டோக்கன்கள் டிசம்பர் வரை ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது.  அடுத்த 6 மாத காலத்திற்கான அதாவது  ஜூன் 2023 வரை பயன்படுத்தக்கூடிய டோக்கன்கள் டிசம்பர் 21 முதல்  வழங்கப்படவுள்ளது. ஒரு மாதத்திற்கு 10 டோக்கன்கள் வீதம், 6 மாதங்களுக்கு 60 கட்டணமில்லா பேருந்து பயண டோக்கன்கள் வழங்கப்படும். அத்துடன்  அடையாள அட்டை புதுப்பித்தல், புதிய பயனாளிகள் பெயர் சேர்த்தல் ஆகியவையும் இதற்காக அமைக்கப்பட்ட மையங்களில் சான்றை ஆதாரம் காட்டி பெற்றுக் கொள்ளலாம்.

முதியவர்கள்

சென்னை முழுவதும் 40 மையங்களில் டிசம்பர் 21ம் தேதி முதல்  ஜனவரி 31  வரை காலை 8 மணி முதல் இரவு 7.30 மணி வரை வழங்கப்பட உள்ளன. வாங்க இயலாதவர்கள்  பிப்ரவரி 1ம் முதல் அந்தந்த பணிமனை அலுவலகத்தில், அலுவலக நேரத்தில் பெற்றுக் கொள்ளலாம். புதிதாக பெற்றுக் கொள்ள விரும்புபவர்கள் இருப்பிட சான்றாக குடும்ப அட்டையின் நகலுடன், வயது சான்றாக ஆதார் அட்டை அல்லது ஓட்டுநர் உரிமம் அல்லது கல்வி சான்றிதழ் அல்லது வாக்காளர் அடையாள அட்டையின் நகல் மற்றும் 2 வண்ண பாஸ்போர்ட் அளவிலான புகைப்படங்கள் போன்ற ஆவணங்களை  சமர்ப்பிக்க வேண்டும்.  பிரதிகள் சமர்ப்பித்தால் போதுமானது அதே நேரத்தில் சரிபார்க்கும் வகையில் அசலையும் எடுத்து வர வேண்டும். புதுப்பிக்க வருபவர்கள் முந்தைய கட்டணமில்லா பயண அடையாள அட்டையுடன் தற்போதைய பாஸ்போர்ட் அளவிலான ஒரு புகைப்படத்தையும் கொண்டு வந்து  புதிய பயண டோக்கன்களை பெற்றுக் கொள்ளலாம்.

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

மப்பேறி தள்ளாடும் நாய்!! மதுவை குடித்ததால் பரிதாபம்!!

From around the web