2023 டிசம்பர் வரை 80 கோடி மக்களுக்கு இலவச உணவு தானியம்!! அதிரடி!!

 
ரேஷன்

இந்தியா முழுவதும் ஏழை எளிய மக்களின் உணவு தேவையை பூர்த்தி செய்யும் வகையில் மத்திய அரசு  உணவு பாதுகாப்பு சட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் படி ஒவ்வொரு மாதமும்  ஒரு கிலோ உணவு தானியம்  மானிய விலையில்  வழங்கப்பட்டு வருகிறது.  முன்னதாக இத்திட்டத்தின் கீழ் ஒரு கிலோ அரசி ரூ.3, ஒரு கிலோ கோதுமை ரூ., ஒரு கிலோ பருப்பு அனைத்தும் ரூ.1க்கு வழங்கப்பட்டு வந்தது.

ரேஷன் விரல் பதிவு கைரேகை
2020ல் உலகம் முழுவதும் கொரோனா பெருந்தொற்று பரவியதால் பலர் வாழ்வாதாரம் இன்றி தவித்து வந்தனர். ஏழை, எளிய மக்களின் துயர் துடைக்க மானிய விலையில் வழங்கப்பட்டு வந்த உணவு தானியங்கள் அனைத்தும் இலவசமாக விலையின்றி வழங்கப்பட்டன. இத்திட்டம் பிரதமரின் ஏழைகள் நலன் திட்டம் என்ற பெயரில் செயல்பட்டு வந்தது.  தற்போது வரை இந்த இலவச ரேஷன் திட்டம் தொடரும் நிலையில், இது மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

ரேஷன்
இது குறித்த மத்திய அமைச்சரவை கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நடத்தப்பட்டது. இந்த கூட்டத்திற்கு பிறகு விடுக்கப்பட்ட செய்திக்குறிப்பில்  இந்த பிரதமர் ஏழை நலன் ரேஷன் திட்டம் உணவு பாதுகாப்பு சட்டத்துடன் இணைக்கப்பட்டு டிசம்பர் 2023 வரை இலவச உணவு தானியம் திட்டம் அமல்படுத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.மத்திய அரசின் இந்த அறிவிப்பு பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

From around the web