ஜனவரி 13ம் தேதி முதல் தீவுத்திடலில் சென்னை சங்கமம் நிகழ்ச்சி! முதல்வர் தொடங்கி வைக்கிறார்!

 
கனிமொழி சென்னை சங்கமம்

சென்னை தீவுத்திடலில், வரும் 2023 ஜனவரி 13ம் தேதி முதல் ஜனவரி17ம் தேதி வரை சென்னை சங்கமம் நம்ம ஊர் திருவிழா திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தலைமையில் நடைபெற உள்ளது. தமிழக அரசின் கலை, பண்பாட்டு, சுற்றுலாத்துறை இணைந்து நடத்தும் சென்னை சங்கமம் நிகழ்ச்சி நடைபெற உள்ளதாக தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவும், திமுக எம்.பி., கனிமொழியும் தெரிவித்துள்ளனர்.

சென்னை சங்கமம்

இந்த நிகழ்ச்சி தொடர்பாக இ ன்று பத்திரிக்கையாளர்களை சந்தித்த கனிமொழி எம்.பி., ஜனவரி மாதம் முழுவதும் தமிழகம் விழாக்கோலம் பெரும் வாய்ப்புள்ளது.  தமிழர்களின் கலைகளைப் பறைசாற்றும்  நிகழ்ச்சிகள் தமிழ்நாடு முழுவதும் நடைபெற உள்ளதாக தெரிவித்தார். ஜல்லிக்கட்டு, சர்வதேச புத்தக கண்காட்சி,சென்னை சங்கமம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் ஜனவரியில் நடைபெறவுள்ளன.  

tn

சென்னை சங்கமம் நிகழ்ச்சியை தீவுத்திடலில், ஜனவரி 13ம் தேதி தமிழக முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.  14ம் தேதி முதல் சென்னையில் பூங்காக்கள், விளையாட்டு திடல்கள் உள்ளிட்ட 16 இடங்களில் சென்னை சங்கமம் நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. உணவு திருவிழாவும் நடைபெற உள்ளது .இந்நிகழ்ச்சியை ஒருங்கிணைக்கும் பணிகளை இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் மேற்கொள்கிறார்.

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

மப்பேறி தள்ளாடும் நாய்!! மதுவை குடித்ததால் பரிதாபம்!!

From around the web