இனிமே இதுக்கும் ஆப்பு தான்!! GPAY, Ph.PAY, PAY TM பணவர்த்தனைகளுக்கு புதிய கட்டுப்பாடுகள்!!

 
யுபிஐ

உலகம் முழுவதும் பணப்பரிவர்த்தனை டிஜிட்டல் முறையில் மாறி வருகிறது. பணத்தை எண்ணி எண்ணி செலவு செய்த காலம் மலையேறி விட்டது. ஒரே ஒரு ஸ்வைப்பில் பணப்பரிமாற்றம் என்பது தான் லேட்டஸ்ட் டெக்னாலஜி.  மெல்ல மெல்ல பல தரப்பட்ட மக்கள் டிஜிட்டல் பண பரிவர்த்தனைகளுக்கு மாறி வந்த நிலையில், கொரோனா ஊரடங்கு நடவடிக்கைகளுக்கு பிறகு வர்த்தகம் முழுவதுமாக மாறியுள்ளது. ரூ5க்கு பிஸ்கட் தொடங்கி மல்டிப்ளக்ஸ் தியேட்டர்கள், மால்கள் வரை டிஜிட்டல் பரிவர்த்தனை மயமாகி விட்டது. தேசிய கட்டணக் கழகம் செப்டம்பர் மாத தரவுகளை வெளியிட்டுள்ளது.

கூகுள் பே மூலம் லஞ்சம்! 3 காவலர்கள் பணியிட மாற்றம்!  கோவை எஸ்.பி. அதிரடி!!

அதில் செப்டம்பரில்  மட்டும் சுமார் 11 லட்சம் கோடிக்கு  போன்பே, ஜிபே போன்ற யுபிஐ செயலிகள் மூலம் பணப்பரிவர்த்தனைகள் நடைபெற்றன. இந்நிலையில், என்பிசிஐ இது குறித்து ஆலோசனைக் கூட்டம் ஒன்றை  நடத்தியது. அதன்படி யுபிஐ செயலிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை அமல்படுத்த முடிவு செய்துள்ளது. ஒரு நாளைக்கு எத்தனை முறை, எவ்வளவு பணம் அனுப்ப முடியும் என்ற கட்டுப்பாட்டை டிசம்பர் இறுதிக்குள் அறிவிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முதல் கட்டுப்பாடாக, ஒரு நாளைக்கு ஒரு நபர் அதிகபட்சமாக ரூ. ஒரு லட்சம் வரை மட்டுமே யுபிஐ செயலிகள் மூலம் பரிவர்த்தனை மேற்கொள்ள முடியும்.

கடும் உளைச்சலில் பொதுமக்கள்!! 3 நாட்களுக்கு மொபைல் சேவைகள் ரத்து!!

அதிலும், கனரா வங்கி போன்ற சிறிய வங்கிகள் ரூ.25,000 வரை மட்டுமே அனுமதித்து வருகின்றன.  அந்தந்த வங்கிகளின் கொள்கைகள் பொறுத்து பணபரித்தனையின் உச்ச வரம்பு நிர்ணயிக்கப்படும். அதே போல்  ஒரு நாளைக்கு ஒரு நபர் அதிகபட்சமாக 20 முறைகள் மட்டுமே போன்பே, பேடிஎம், ஜிபே போன்ற செயலிகள் மூலம் பரிவர்த்தனைகள் மேற்கொள்ள முடியும். அதே நேரத்தில் எத்தனை முறை பரிவர்த்தனை, அதிகபட்சம் எவ்வளவு ரூபாய் பரிவர்த்தனை செய்யலாம் என்பது வங்கிகளை பொறுத்தும், செயலிகளை பொறுத்தும் மாறலாம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த கட்டுப்பாடுகள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு நடப்பாண்டு இறுதிக்குள் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வர்த்தக அடிப்படையில்  யுபிஐ செயலிகளில் பரிவர்த்தனைகள் மேற்கொள்பவர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

From around the web