டிசம்பர் 28ம் தேதி முழு அடைப்பு போராட்டம்!!

 
கடையடைப்பு

தமிழகத்தில் அருகில் அமைந்துள்ள புதுச்சேரி அரசு யூனியன் பிரதேசமாக மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வருகிறது.இதனால் புதுச்சேரியை பொறுத்தமட்டில் கவர்னர் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறது. புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து அளிக்க கோரி அவ்வப்போது ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படுவதுண்டு. ஆனால் இதுவரை அந்தஸ்து கிடைக்கவே இல்லை.

அதிமுக

இது குறித்து அதிமுக சார்பில் ஆலோசனை கூட்டம் நடந்தது. அதன் பின்னர் மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் விடுத்த செய்திக்குறிப்பில்  “ புதுச்சேரி மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள ஒரு பிரதேசமாக அறிவிக்கப்பட்டு, அதற்கான சட்ட விதிகளின்படி புதுச்சேரி நிர்வாக முழு அதிகாரமும் கவர்னர் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறது. மத்தியிலும், மாநிலத்திலும் ஒரே கட்சி ஆட்சியின்போது வளர்ச்சி பாதிக்கப்படாமல் இருந்தது. வெவ்வேறு கட்சிகள் ஆட்சி அமைந்தபோது அரசியல் கண்ணோட்டத்தோடு பார்க்கப்பட்டதால் மாநில வளர்ச்சி பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளது.  

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெற தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 1998ல் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இது குறித்து  அப்போது பிரதமராக இருந்த வாஜ்பாய் தலைமையிலான அமைச்சரவையில் கொள்கை முடிவு எடுக்கப்பட்டது. அதன் பிறகு ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தால்  மாநில அந்தஸ்து கிடைக்கவில்லை. புதுச்சேரி அரசின் நிர்வாகம் சொந்த வருவாயில் செயல்பட்டு வருவதால் மாநில அந்தஸ்து வழங்குவது மத்திய அரசின் கடமையாகும். மக்களின் நலன் கருதி, புதுச்சேரி அரசு சுதந்திரமாக செயல்பட மாநில அந்தஸ்து தேவை என்பதை மீண்டும் வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

இரட்டை தலைமை தொடருமா..? இன்று கூடும் அ.தி.மு.க செயற்குழு கூட்டம்..!!

அதன்படி டிசம்பர் 28ம் தேதி புதுச்சேரி, காரைக்கால், மாகி, ஏனாம் ஆகிய 4 பிராந்தியங்களிலும் முழுஅடைப்பு போராட்டம் நடத்தப்படும்.  மாநில அந்தஸ்தை விரும்பும் அரசியல் கட்சிகள், அனைத்து அமைப்புகள், பேருந்து உரிமையாளர்கள், ஆட்டோ டிரைவர்கள், அமைப்புசாரா தொழிலாளர்கள், நடைபாதை வியாபாரிகள், வர்த்தக நிறுவனத்தினர் இந்த போராட்டத்திற்கு முழுஆதரவு அளிக்கவேண்டும்” என வேண்டுகோள் விடுத்துள்ளார். 

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

From around the web