ரூ.25 லட்சம் வரை நிதியுதவி! இன்று முதல் சிறப்பு ஊக்கத் தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்பு!

 
தமிழக அரசு

இன்று முதல் சிறப்பு ஊக்கத் தொகை பெறுவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விளையாட்டு வீரர்களுக்கு ரூ.25 லட்சம் வரையில் நிதியுதவி வழங்கப்படுகிறது. டிசம்பர் 15ம் தேதி வரையில் விண்ணப்பிக்கலாம்.  தமிழகத்தில் மாவட்ட மற்றும் மாநில அளவில் விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்க பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக ஒவ்வொரு வருடமும் விளையாட்டுக்களில் திறமையுள்ள வீரர்களுக்கு சிறப்பு உதவி மற்றும் ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. நடப்பாண்டிற்கான உதவித் தொகை குறித்து தமிழ்நாடு விளையாட்டு ஆணையம் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

விளையாட்டு வீரர்களுக்கு உதவி தொகை

அதில் விளையாட்டுக்களில் மேலும் திறமையை வெளிப்படச் செய்யவும், வளர்த்துக் கொள்ளவும் தகுதியும் திறமையும் உள்ள சிறப்பு உதவித்தொகை பெற விரும்பும் விளையாட்டு வீரர்கள் நவம்பர் 30 நாளை முதல் டிசம்பர் 15ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என  தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் அறிவித்துள்ளது. இதன்படி அடுத்த 2 ஆண்டுக்கு போட்டிகளில் பங்கேற்க, பயிற்சி எடுக்க உதவித்தொகை பெற விண்ணப்பிக்க முடியும்.  விளையாட்டு வீரர்கள் சிறப்பு உதவித்தொகை பெற நாளை முதல் sdat@tn.gov.in என்ற இணையதளம் மூலம்  விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விளையாட்டு வீரர்களுக்கு உதவி தொகை

அத்துடன் ஆன்லைன் மூலம் வரும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்கப்படும். இந்த உதவித் தொகையைப் பொறுத்தவரை மாநில, தேசிய, சர்வதேச அளவிலான போட்டிகளில் பதக்கம் வெல்பவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும். சிறப்பு  உதவித் தொகை பெற தகுதியானவர்களை அரசின் உயர்மட்ட குழு தேர்வு செய்யும். மேலும் விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு ஓராண்டுக்கு ரூ.2 லட்சம் முதல் ரூ.25 லட்சம் வரை நிதியுதவி வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

மப்பேறி தள்ளாடும் நாய்!! மதுவை குடித்ததால் பரிதாபம்!!

From around the web