ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம்!! அர்ஜெண்டினாவுக்கு அமோக வரவேற்பு!! வீடியோ!!

 
அர்ஜெண்டினா

கத்தார் நாட்டில், தோகாவில் 22வது உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் நடைப்பெற்ற்ன. இதில்  இறுதி போட்டியில், நடப்பு சாம்பியன் பிரான்ஸ் அணியும், முன்னாள் உலக கோப்பை சாம்பியனான அர்ஜென்டினா அணியும் மோதின. உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் இந்த இறுதி ஆட்டத்தில் வெல்லப் போகும் அணி எது என்று அறிந்து கொள்ள பேராவலுடன் பார்த்து மகிழ்ந்த நிலையில், பிரான்ஸை வீழ்த்தி உலக கோப்பையை அர்ஜெண்டினா வென்றது. 


3வது முறையாக, 36 ஆண்டுகளுக்கு பிறகு கோப்பையை வென்றுள்ளது அர்ஜெண்டினா அணி. இந்த வெற்றியின் மூலமாக உலகக் கோப்பை விளையாட்டின் 60 கால ஆண்டு வரலாற்றில் அடுத்தடுத்து உலக கோப்பையை வென்ற முதல் அணி என்ற பெருமையை பிரான்ஸ் அணி தட்டிச் செல்வதைத் தடுத்திருக்கிறார்கள் அர்ஜெண்டினா வீரர்கள். வெற்றிக் கோப்பையுடன், சாம்பியன் பட்டம் வென்ற அர்ஜெண்டினா அணிக்கு சுமார் ரூ.347 கோடி பரிசுத் தொகை வழங்கப்பட்டது.

உலககோப்பை கால்பந்து

உலகக் கோப்பையின் விடைப்பெறும் மெஸ்ஸியின் கனவு மெய்பட்டது. இறுதி ஆட்டத்துடன் கால்பந்து விளையாட்டின் ஜாம்பவான் மெஸ்சி விடைப் பெறுவதால் இந்த போட்டி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், மரோடோனாவுக்கு பின்னர், உலக கோப்பையை பெற்று தந்திருக்கிறார் மெஸ்ஸி.யெஸ்.. இதற்கு முன்பாக 1986ம் ஆண்டு மரோடோனா தலைமையிலான அர்ஜெண்டினா அணி உலக கோப்பையை வென்றிருந்தது. முன்னதாக 1978, 1986ம் ஆண்டுகளில் ஏற்கெனவே சாம்பியன் பட்டம் வென்றுள்ளது அர்ஜெண்டினா. மரோடோனாவிற்கு பிறகு அர்ஜெண்டினா அணிக்கு உலக கோப்பையை வென்று கொடுத்தார் மெஸ்ஸி.

இந்நிலையில் உலகக் கோப்பையுடன் அர்ஜென்டினா அணியினர் இன்று தாயகம் திரும்பினர்.அந்த வகையில் நாடு திரும்பிய அர்ஜெண்டினா அணிக்கு தலைநகர் பியூனஸ் அயர்சில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது . வழிநெடுகிலும் லட்சக்கணக்கான ரசிகர்கள், அணி வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். சாலைகளின் இரு புறங்களிலும் ரசிகர்கள் ஆட்டம் ஆடி , பாட்டுப்பாடி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டனர்.

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

From around the web