பொங்கல் ரொக்கப்பணம் வாங்க தயாராகுங்க!! நாளை முதல் வீடு , வீடாக டோக்கன் விநியோகம்!!

 
பொங்கல்

தமிழகத்தில் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை ஒவ்வொரு வருடமும் மிகச்  சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை மேலும் சிறப்பாக்கும் வகையில் தமிழக அரசு பொங்கல் சிறப்பு தொகுப்பு வேஷ்டி, சேலை , ரொக்கப்பணம் இவைகளை வழங்கி வருகிறது . அந்த வகையில் நடப்பாண்டில் பொங்கல் சிறப்பு தொகுப்பாக வேஷ்டி சேலை, ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை இவற்றுடன் ரூ.1000 ரொக்கப் பணம் வழங்கப்படும் என தமிழக அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது. இந்த தொகுப்பு தமிழகத்தின் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிப்பவர்களுக்கும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பொங்கலுக்கான  ரொக்கப் பணம் வழங்கும் நிகழ்ச்சி ஜனவரி 2ம்தேதி முதல்வரால் தொடங்கி வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அசத்தல்!! மக்களே பொங்கல் சிறப்பு தொகுப்பை பெற தயாராகிட்டீங்களா? தமிழக அரசு முக்கிய அறிவிப்பு!!

இந்த ரொக்கப் பணம் தமிழகத்தில் உள்ள 33,000 ரேஷன் கடைகள் மூலமாக வழங்கப்பட உள்ளது. இதற்கான ஆயத்த பணிகள் இன்று  டிசம்பர் 26ம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளன. அதன்படி இதற்கான டோக்கன்கள் நாளை முதல் வீடு வீடாக விநியோகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  பொதுவாக ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்குவதற்கு  குடும்பத்தினர் யாராவது ஒருவர்  கைவிரல் ரேகை பதிவு செய்யப்பட்டு பின் வழங்கப்பட்டு வருகிறது.  அது போல பொங்கல் பண்டிகைக்கான பச்சரிசி மற்றும் சர்க்கரை பெறவும் ஸ்மார்ட் கார்டுடன் கைரேகையும் பதிவு செய்ய வேண்டும். ரூ.1000 ரொக்கம் பெறவும் கைரேகைப் பதிவு இந்த முறை அவசியம் என அறிவிக்கப் பட்டுள்ளது. பொங்கல் பரிசு பொருட்கள் மற்றும் ரொக்கம் வழங்குவதில் முறைகேடு நடைபெறாமல் தடுப்பதற்காக இவை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

அசத்தல்!! மக்களே பொங்கல் சிறப்பு தொகுப்பை பெற தயாராகிட்டீங்களா? தமிழக அரசு முக்கிய அறிவிப்பு!!

தமிழகம் முழுவதும் ஜனவரி 2ம் தேதி முதல் சென்னை உட்பட அனைத்து மாவட்டங்களிலும் பொங்கல் பரிசு வழங்கும் பணி தொடங்க இருக்கிறது.  ஜனவரி 13ம் தேதி போகிப் பண்டிகைக்கு முன்பே அனைத்து அரிசி அட்டைதாரர்களுக்கும் இவை வழங்கப்பட வேண்டும் என பொது விநியோகத் திட்ட அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.  பொங்கல் பரிசு மற்றும் ரூ.1000 பெறுவதற்கு ரேசன் கடைகளில் கூட்ட நெரிசல் ஏற்படுவதை தவிர்க்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  தினமும் 100 முதல் 200 கார்டுகளுக்கு ஒவ்வொரு ரேஷன் கடைகளிலும் வினியோகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. எந்தெந்த தெருவில் உள்ளவர்கள் எந்த தேதியில் பெற வேண்டும் என டோக்கனில் குறிப்பிடப்பட்டிருக்கும். இந்த டோக்கன்களில்  பொங்கல் பரிசு தொகை பெறும் நாள், நேரம் போன்றவற்றை குறிப்பிடப்பட்டிருக்கும். ஒவ்வொரு வீடாக இதனை ரேசன் கடை ஊழியர்கள் வழங்க இருக்கின்றனர்.  நாளையும், மறுநாளும் அதாவது டிசம்பர் 27, 28ம் தேதிகளில் வீடுகளுக்கு டோக்கன் வழங்கப்பட உள்ளது.

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

From around the web