பெண்களே உஷார்!! சானிட்டரி நாப்கின்களின் அபாயம் !! எச்சரிக்கும் ஆய்வறிக்கை முடிவுகள்!!

 
சானிட்டரி நாப்கின்

இந்தியாவில் விற்கப்படும் பிரபல பிராண்டுகளான சானிட்டரி நாப்கின்களில் தீங்கு விளைவிக்கும் ரசாயனங்கள் கலந்திருப்பதாக டெல்லியைச் சேர்ந்த டாக்ஸிக்ஸ் லிங்க் என்ற லாப நோக்கற்ற நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.பெண்கள் மாதவிலக்கு காலங்களில் பயன்படுத்தும் சானிட்டரி நாப்கின் குறித்து ஆய்வுகள் நடத்தப்பட்டன. அதன் முடிவுகள் நேற்று நவம்பர் 21, திங்கட்கிழமை வெளியிடப்பட்டன. அதில் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகின.  சானிட்டரி நாப்கினில் ஈரத்தை உறிஞ்சவும், அதனை தக்க வைத்துக் கொள்ளவும் இரண்டு முக்கிய ரசாயனங்கள் கலக்கப்படுகின்றன.  

சானிட்டரி நாப்கின்

மென்மையாகவும், நெகிழ்வாகவும் இருப்பதற்காகவும் அடுத்தடுத்த அடுக்குகளில் இணைக்கவும் இந்த ரசாயனங்கள் சானிட்டரி பேட்களில் பயன்படுத்தப்படுவதாக விளக்கம் அளித்துள்ளனர். தற்போது சந்தையில் முண்ணனியில் இருக்கும்  10 வகையான சானிட்டரி பேட்கள் சோதனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. ஒவ்வொரு தயாரிப்புக்கும், அவர்கள் தாலேட்டுகள் மற்றும் VOCகளின் அளவுகளை, தனித்தனியாக, அறிக்கையில் வழங்கப்பட்டுள்ளன.  இந்த ஆய்வுகளின் படி பித்தலேட்டுகளால் ஏற்படும் உடல்நலக் குறைபாடுகளை பட்டியலிடுகிறது. இந்த பித்தலேட்டுக்கள் மலட்டுத்தன்மை,  கர்ப்பம் மற்றும்  கரு வளர்ச்சியில் உள்ள சிக்கல்கள், இன்சுலின் எதிர்ப்பு, உயர் இரத்த அழுத்தம் மற்றும் சீறுநீரகக் கோளாறுகளை ஏற்படுத்தி விடக்கூடும் என தெரிவிக்கின்றன.

இதனையடுத்து அதில் பயன்படுத்தப்படும் மற்றொரு ரசாயணம் VOCகள். இவை  பெரும்பாலும் வண்ணப்பூச்சுகள், டியோடரண்டுகள், ஏர் ஃப்ரெஷனர்கள், நெயில் பாலிஷ், அந்துப்பூச்சி விரட்டிகள், எரிபொருள்கள் மற்றும் வாகன தயாரிப்புகளில் பயன்படுத்தப்படக்கூடியவை. இவை ஆரோக்கியத்தில் பாதகமான விளைவுகளை ஏற்படுத்திவிடலாம். ஆனால்  நாப்கின்களில், வாசனை சேர்க்க பயன்படுத்தப்படுவதாக  தயாரிப்பாளர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.   இதனால்  மூளையின் செயல்பாடு, தோல் அழற்சி, இரத்த சோகை, கல்லீரல் மற்றும் சிறுநீரக செயலிழப்பு, சோர்வு மற்றும் சுயநினைவின்மை வரை ஏற்படலாம் என பட்டியலிடப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் , சுகாதாரப் பொருட்களில் இரசாயனங்கள் இருப்பதைக் கட்டுப்படுத்தும் சட்டங்கள் மிகவும் பலவீனமாகவே  உள்ளன.

சானிட்டரி நாப்கின்

அமெரிக்கா, பிரான்ஸ், ஆஸ்திரேலியா மற்றும் சீனாவிலும் இவை சாதாரணமாக பயன்படுத்தப்படுகின்றன. இதில்  ஐரோப்பிய ஒன்றியம்  மற்றும் தென் கொரியா மட்டுமே சில சட்டப்பூர்வ விதிமுறைகளைக் கொண்டுள்ளன. தென் கொரியாவில், அவை தடை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தியாவை பொறுத்தவரை  சுகாதாரப் பொருட்களில் ரசாயனங்கள் இருப்பதைக் கட்டுப்படுத்த எந்தச் சட்டமும் இல்லை.BIS போன்ற அமைப்புக்கள் தரத்தை தான் பரிந்துரை செய்யுமே தவிர இரசாயனங்களை கட்டுப்படுத்தாது.   தரநிலைகள் அவற்றின் இருப்பை ஒரு குறிப்பிட்ட அளவிற்கு கட்டுப்படுத்துவது முதல் முற்றிலும் தடை செய்வது வரை இருக்க வேண்டும். இவை அனைத்தும் உடனே சீராக்கப்படவேண்டியவை என ஆய்வக மருத்துவ வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். 

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

மப்பேறி தள்ளாடும் நாய்!! மதுவை குடித்ததால் பரிதாபம்!!

From around the web