மீண்டும் உச்சம் தொட்ட தங்கம்!! இல்லத்தரசிகள் அதிர்ச்சி!!

 
மீண்டும் உயர்ந்தது தங்கம் விலை!! வெறிச்சோடிய நகைக் கடைகள்!! மேலும் அதிகரிக்க வாய்ப்பு!

அமெரிக்காவின் மத்திய வங்கி, ஐரோப்பிய மத்திய வங்கிகள் வட்டி விகிதத்தினை அதிகரிக்க திட்டமிடுகின்றன. இதன் காரணமாக தங்கத்தில் முதலீடுகள் குறையலாம். அதோடு இந்தியாவிலும் இறக்குமதி வரி அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், இதுவும் தேவையினை குறைக்கலாம். ஆக இதுவும் அழுத்தத்தினை கொடுத்துள்ளது. இதற்கிடையில் தான் தங்கம் இடிஎஃப்களில் இருந்தும் முதலீடுகள் வெளியேற ஆரம்பித்துள்ளன.

தங்கம்
அமெரிக்க வங்கியானது வட்டி விகிதத்தினையும் அதிகரித்துள்ள நிலையில், இது டாலரின் மதிப்பு ஏற்றம் காண வழிவகுத்துள்ளது. இதனால் அமெரிக்கா உட்பட பல நாடுகளில் பணவீக்கம் கடுமையாக அதிகரித்து வருகிறது. இதன் தாக்கம் தங்கத்தில் எதிரொலிக்கிறது.சென்னையில் கடந்த சில நாட்களாக உயர்ந்து விற்பனையான தங்கம் விலை இன்று  மீண்டும் கிராமுக்கு ரூ 50 அதிகரித்துள்ளது. இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தங்கம்
சர்வதேச சந்தையின் விலை நிலவரத்தின் அடிப்படையில் சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. இன்றைய விலை நிலவரப்படி கிராமுக்கு ரூ50 அதிகரித்துள்ளது. அதன்படி ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ5115க்கும், ஒரு சவரனுக்கு ரூ400அதிகரித்து ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை ரூ.40,920க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.  ஒரு கிராம் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2.20 விலை அதிகரித்து ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.74.70க்கும், ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.74,700 க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

From around the web