தொடர் உச்சத்தில் தங்கத்தின் விலை !! நகைப்பிரியர்கள் அதிர்ச்சி!!

 
தங்கம்

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை நிலவரத்தை பொறுத்து சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை  நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. தங்கத்தின் விலை ஏறினாலும், இறங்கினாலும் இந்தியாவை பொறுத்தவரை தங்கத்தின் மவுசு தனி தான். நடுத்தர வர்க்கத்தினர், இல்லத்தரசிகளுக்கு தங்கநகை சேமிப்பு என்பது பெரும் சேமிப்பாகவும், முதலீடாகவும் இருந்து வருகிறது.

மீண்டும் உயர்ந்தது தங்கம் விலை!! வெறிச்சோடிய நகைக் கடைகள்!! மேலும் அதிகரிக்க வாய்ப்பு!

நவம்பர் தொடக்கம் முதலே உச்சம் தொட்டு வரும் தங்கத்தின் விலை நடப்பு வாரத்தில் சற்றே குறைந்து வருகிறது. ஒரு நாள் இறங்கினாலும் அடுத்த நாளே தங்கத்தின் விலை அதிகரித்து வருவது நகைப்பிரியர்கள் , முதலீட்டாளர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது. 

தங்கம்

 ஆனால் இந்த வாரத் தொடக்கம் முதலே தங்கத்தின் விலை குறையத் தொடங்கியுள்ளது.  இதனால் இல்லத்தரசிகள் பெருமகிழ்ச்சி  அடைந்துள்ளனர்.இந்தியாவில் கொரோனா ஊரடங்கு நடவடிக்கைகளுக்கு பிறகு தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்துள்ளதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

இன்றைய விலை நிலவரத்தின் படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.4 அதிகரித்து, ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,935க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சவரனுக்கு ரூ.32 அதிகரித்து, ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.39,480க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தங்கத்தின் விலை  அதிகரித்த அதே நேரத்தில் வெள்ளியின் விலை, 20 காசுகள் குறைந்துள்ளது. அதன்படி  ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.68.00 க்கும்,ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.200 குறைந்து, ரூ.68,200க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

மப்பேறி தள்ளாடும் நாய்!! மதுவை குடித்ததால் பரிதாபம்!!

From around the web