தொடர் சரிவில் தங்கத்தின் விலை!! நகை ப்ரியர்கள் உற்சாகம்!!

 
தங்கம்

இந்தியாவில் தங்கத்தின் விலை மார்ச் மாதம் இறக்குமதி வரிவிதிக்கப்பட்ட பிறகு ஏற்ற இறக்கமாகவே இருந்து வருகிறது. நடுத்தரவர்க்கத்தினரின் மிகப்பெரிய சேமிப்பு வங்கியாக தங்கம் தான் இருந்து வருகிறது. சென்னையை பொறுத்தவரை சர்வதேச சந்தையின் விலை நிலவரத்தை பொறுத்து ஆபரணத் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது.

தங்கத்தின் விலை ஏறினாலும் இறங்கினாலும் தங்கத்திற்கான மவுசு தனி தான்.  தங்கத்தின் மீதான சேமிப்பு  கொரோனா காலகட்டத்திற்கு பிறகு இரட்டிப்பாக அதிகரிக்க தொடங்கியுள்ளதாக பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 

தங்கம்

மார்ச் மாதத்தில் தங்கத்தின் மீது இறக்குமதி வரி விதிக்கப்பட்டது. அதன் பிறகே தங்கத்தின் விலை உச்சம் தொட்டு வருகிறது. ஒரு நாள் தங்கத்தின்விலை குறைந்த போதிலும் அடுத்த நாளே இரட்டிப்பாக அதிகரித்து விடுகிறது. அக்டோபர் மாதம் முழுவதும் தங்கத்தின் விலை குறைந்த நிலையில் நவம்பர் தொடக்கம் முதலே தங்கத்தின் விலை ஏறுமுகமாக இருந்து வருகிறது. கடந்த வாரத்தில் உச்சம் தொட்ட தங்கத்தின் விலை வார இறுதியில் சற்றே குறைந்து ஆறுதலை அளித்தது. அந்த வகையில் நேற்றும் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ5 குறைந்துள்ளது. இதனால் முதலீட்டாளர்கள் சற்றே ஆறுதல் அடைந்துள்ளனர்.

தங்கம்

நேற்றைய விலை நிலவரப்படி  சென்னையில்,  ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து, ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,920க்கும்,சவரனுக்கு ரூ.40 குறைந்து, ஒரு சவரன் ரூ.39,360க்கும் விற்பனை செய்யப்பட்டன. 

இன்றைய விலை நிலவரப்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.15 குறைந்து, ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,905க்கும்,  சவரனுக்கு ரூ.120 குறைந்து, ஒரு சவரன் ரூ.39,240க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தங்கத்தின் விலை குறைந்த அதே நேரத்தில் வெள்ளியின் விலை, 50 காசுகள் அதிகரித்து ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.67.00 க்கும், ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.500 அதிகரித்து, ரூ.67,000க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

மப்பேறி தள்ளாடும் நாய்!! மதுவை குடித்ததால் பரிதாபம்!!

From around the web