மீண்டும் உயர்ந்தது தங்கம் விலை! கதறும் இல்லத்தரசிகள்!

 
அடி தூள்!! தங்கம் விலை அதிரடி குறைவு!! காலையிலேயே குவிந்த இல்லத்தரசிகள்!!

இன்றைய காலை நேர நிலவரப்படி ஆபரண தங்கம் விலை ஒரு கிராமுக்கு ரூபாய் 32 அதிகரித்துள்ளது. இதன் மூலமாக ஒரு கிராம் ஆபரண தங்கத்தின் விலை ரூ.5355க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை ரூ.42,840க்கு விற்கப்படுகிறது. தை பிறந்தால் வழி பிறக்கும் என்று திருமணத்திற்காக நகைகளை வாங்க காத்திருந்தவர்கள், இந்த தங்கத்தின் தொடர் விலை உயர்வினால் கலக்கமடைந்துள்ளனர். சர்வதேச நிலவரத்துக்கு ஏற்ப தங்கத்தின் விலை அவ்வப்போது ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. அதன்படி, தங்கத்தின் விலை மாறி மாறி ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. இந்நிலையில், கடந்த சில வாரங்களாக தங்கத்தின் விலை அதிரடியாக அதிகரித்து வருகிறது.

gold jewels

இந்நிலையில், இன்று ஆபரணத் தங்கம் கிராமுக்கு ₹32 அதிகரித்துள்ளது. அதனால், நேற்று ₹5,323 க்கு விற்கப்பட்ட ஒரு கிராம் ஆபரணத் தங்கம் இன்று ₹5,355 க்கு விற்கப்படுகிறது. மேலும், ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலையும் ₹256 அதிகரித்துள்ளது. இதனால், நேற்று ₹42,584 க்கு விற்கப்பட்ட ஒரு சவரன் ஆபரணத் தங்கம் இன்று ₹42,840 க்கு விற்கப்படுகிறது.

தங்கம்

வெள்ளியின் விலையிலும் இன்று மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதன்படி, இன்று வெள்ளி ஒரு கிராமுக்கு ₹0.70 குறைந்துள்ளது. இதனால், நேற்று ₹74.70 க்கு விற்கப்பட்ட ஒரு கிராம் வெள்ளி இன்று ₹74.00 க்கு விற்கப்படுகிறது. மேலும் ஒரு கிலோ வெள்ளியின் விலை ₹74,000 ஆக உள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்!

From around the web