தங்கம் விலை சவரனுக்கு 256 ரூபாய் உயர்வு! அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்!

 
தங்கம்

இன்றைய காலை நேர விலை நிலவரப்படி ஆபரண தங்கத்தின் விலை, சவரனுக்கு ரூ.256 அதிகரித்துள்ளது. விலை குறையும் போது கிராம் ஒன்றுக்கு ஒற்றை இலக்க எண்களில் விலை குறையும் தங்கம், விலை அதிகரிக்கும் போது பாய்ச்சலில் அதிகரிக்கிறது. தொடர்ந்து உயர்ந்து வரும் தங்கத்தின் விலை, இல்லத்தரசிகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது. பொதுவாக  மார்கழி மாதத்தில் திருமணங்களையும், மற்ற சுப காரியங்களையும் நடத்த மாட்டார்கள். இந்நிலையில், தை மாத முகூர்த்தத்தில் திருமணத்திற்கு தங்கம் வாங்க காத்திருந்தவர்களுக்கு இந்த தொடர் விலை உயர்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

Gold & Silver

அதன்படி, சென்னையில் நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 24 ரூபாய் உயர்ந்து விற்பனை ஆன நிலையில், இன்று காலை நிலவரப்படி ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை 32 ரூபாய் உயர்ந்து, ரூ.5,355-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரனுக்கு 256 ரூபாய் உயர்ந்து, ரூ.42,840-க்கு விற்பனையாகிறது.

அதேபோல், நேற்று 18 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.4,360-க்கு விற்பனையான நிலையில், இன்று காலை நிலவரப்படி ஒரு கிராம் (18 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை 27 ரூபாய் உயர்ந்து, ரூ.4,387-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Gold rate

ஒரு கிலோ வெள்ளியின் விலை நேற்று மாலை 74,700 ரூபாயாக இருந்த நிலையில், இன்று காலையில் வெள்ளியின் விலை கிலோவுக்கு 700 ரூபாய் குறைந்து, ரூ.74,000-க்கு விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிராம் வெள்ளி ரூ.74.00-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்!

From around the web