”நாட்டு நாட்டு” பாடலுக்கு கோல்டன் குளோப் விருது!! குவியும் வாழ்த்துக்கள்!!

 
நாட்டு நாட்டு

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கோல்டன் குளோப் விருது வழங்கும் விழா நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் கடந்த ஆண்டு வெளியான ஆர்.ஆர்.ஆர். படத்தில் இடம் பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு கோல்டன் குளோப் விருது வழங்கப்பட்டுள்ளது.இந்தியாவின்  பிரம்மாண்ட இயக்குநர் ராஜமௌலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர்., அஜய் தேவ்கன், ஆலியா பட், ஸ்ரேயா, சமுத்திரக்கனி என நட்சத்திர பட்டாளங்கள் நடிப்பில் கடந்த ஆண்டு மார்ச் 22ம் தேதி ஆர்.ஆர்.ஆர். படம் வெளியானது. இந்த படத்திற்கான இசையமைப்பாளர்  கீரவாணி. கோல்டன் குளோப் விருதுக்கான நாமினேஷன் பட்டியலில் 2 பிரிவுகளில் ஆர்.ஆர்.ஆர் படம் இடம் பெற்றிருந்தது.


 ஆங்கில மொழி இல்லாத படத்திற்கான பிரிவிலும், சிறந்த பாடல் பிரிவிலும் இந்த  நாட்டு நாட்டு பாடல்  இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த விழாவில் இயக்குநர் ராஜமௌலி, நடிகர்கள் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர்., இசையமைப்பாளர் கீரவாணி ஆகியோர் கலந்து கொண்டு விருதைப் பெற்றுக்கொண்டனர். ஆர்ஆர்ஆர்’ படம் மட்டுமே நாமினேஷனில் இடம்பிடித்திருந்தது .இதனையடுத்து அகாடமி அவார்ட்ஸ் என அழைக்கப்படும் ஆஸ்கர் விருது விழா மார்ச் 12ம் தேதி நடைபெற உள்ளது. 

ராஜமௌலி
இந்த விருதை பொறுத்தவரை ஆர்.ஆர்.ஆர். படம், சிறந்த இயக்குநர் (ராஜமெளலி), சிறந்த நடிகர் (ஜூனியர் என்.டிஆர், ராம் சரண்), சிறந்த துணை நடிகர்(அஜய் தேவ்கன்), சிறந்த பாடல் ( நாட்டு நாட்டு), சிறந்த பின்னணி இசை (கீரவாணி), சிறந்த படத்தொப்பாளர் (ஸ்ரீகர் பிரசாத்), சிறந்த ஒலி அமைப்பு (ரகுநாத் கெமிசெட்டி, போலோ குமார் டோலாய், ராகுல் கர்பே), சிறந்த திரைக்கதை ( விஜயேந்திர பிரசாத், ராஜமெளலி, சாய் மாதவ்), சிறந்த துணை நடிகை ( ஆலியா பட்), சிறந்த ஒளிப்பதிவு ( செந்தில் குமார்), சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு (சாபு சிரில்), சிறந்த ஆடை அமைப்பாளர் ( ராம ராஜமெளலி), சிறந்த சிகை அலங்காரம் மற்றும் ஒப்பனையாளர் (நல்ல ஸ்ரீனு, சேனாபதி ), சிறந்த காட்சி அமைப்பு (ஸ்ரீனிவாஸ் மோகன்) ஆகிய பிரிவுகளில்  பரிந்துரை செய்யப்பட்டது. ஆஸ்கர் விருது பெறும் படங்களின்   இறுதிப்பட்டியல் ஜனவரி 24ம் தேதி வெளியிடப்பட உள்ளது . இதிலும் ஆர்.ஆர்.ஆர் படம் இடம் பெறலாம் என ஆர்வத்துடன்  ரசிகர்கள் எதிர்பார்த்து காத்து கிடக்கின்றனர். 

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

From around the web