பெரும் சோகம்! விபத்துக்குள்ளான விமானத்தின் இறுதி தருணங்கள்! வெளியானது புதிய வீடியோ!

 
நேபாள் விமா

நேபாள வரலாற்றில் நேற்றைய தினம் மிக மோசமான தினமாக பதிவு செய்யப்பட்டிருக்கும். இன்று ஒரு நாள் துக்க தினமாக அரசு அறிவித்துள்ளது. நேற்றைய விமான விபத்தில் 67 பேர் பலியாகியுள்ளனர்.

இந்நிலையில், விபத்துக்குள்ளான விமானத்தில் பயணித்த இந்தி பயணி ஒருவர், விமானம் விபத்துக்குள்ளாகும் சில நிமிடங்களுக்கு முன்பாக பேஸ்புக்கில் லைவ் வீடியோவை பதிவு செய்திருக்கிறார். அந்த வீடியோவைப் பதிவு செய்த பயணி சோனு ஜெய்ஸ்வால் என அடையாளம் காணப்பட்டுள்ளது. சோனு ஜெய்ஸ்வால் தனது எட்டி ஏர்லைன்ஸ் விமான அனுபவத்தை அவரது மூன்று நண்பர்களுடன் பேஸ்புக் நேரலை வீடியோவில் மகிழ்ச்சியுடன் பதிவு செய்து கொண்டிருந்தார். வீடியோவில் விமானத்தின் உள் பகுதியையும், அதன் ஜன்னலுக்கு வெளியேயும் காட்சிகளைக் காண்பிக்கிறார். இந்நிலையில், திடீரென விமானம் விபத்துக்குள்ளானதால் அவர்களின் உற்சாகம் விரைவில் பயங்கரமாக மாறுகிறது. ஜெய்ஸ்வால் படம் பிடித்த வீடியோவில் அதன் பின்னர் தீப்பிடித்து, பயணிகளின் அலறல் சத்தம் கேட்கிறது.

காத்மாண்டுவில் இருந்து பொக்காரா நோக்கிப் பறந்து கொண்டிருந்த எட்டி ஏர்லைன்ஸ் விமானம், செங்குத்தான பள்ளத்தாக்கில் நேற்று விழுந்து, சிதைந்து தீப்பிடித்ததில் உயிரிழந்தவர்களில் ஐந்து இந்தியர்களும் அடங்குவர் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், அவர்களில் நான்கு பேர் உத்தரபிரதேசத்தின் காஜிபூரைச் சேர்ந்தவர்கள் என கண்டறியப்பட்டுள்ளது. சோனு ஜெய்ஸ்வால் (35), அபிஷேக் குஷ்வாஹா (25), விஷால் ஷர்மா (22), மற்றும் அனில் குமார் ராஜ்பார் (27). இவர்களின் சோனு பதிவு செய்திருந்த பேஸ்புக் லைவ் வீடியோ இப்போது வைரலாகி வருகிறது. மகிழ்ச்சியாக இருக்கையில் சிரித்தப்படி இருக்கும் பயணிகள் அடுத்த சில நிமிடங்களில் தீப்பிழப்பில் துடிதுடிக்க உயிரை இழக்கிறார்கள். எங்கும் தீப்பிழம்பும், மரண ஓலமுமாக இருக்கிறது.

நேபாள விமான

தனக்கு ஆண் குழந்தைப் பிறக்க வேண்டும் என்கிற பிரார்த்தனை நிறைவேறியதால், ஜெய்ஸ்வால், காத்மாண்டுவில் உள்ள பசுபதிநாதர் கோவிலுக்கு தனது நண்பர்களையும் நேபாளத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார். கோவிலில் பிரார்த்தனை செய்து விட்டு, அவர்கள் பாரா கிளைடிங்கிற்காக புகழ்பெற்ற சுற்றுலா நகரமான போகாராவுக்குச் சென்று கொண்டிருந்தனர். ஆனால் விதி அவருக்கு வேறு விதமாக எழுதி வைத்திருக்கிறது’ என்று அவரது உறவினர் கண்ணீருடன் தெரிவித்தார். உயிரிழந்த ஜெய்ஸ்வாலுக்கு மனைவி, கைக்குழந்தை மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர். விபத்தில் பலியானவர்களில் இதுவரை 67 பேரின் உடல்களை மீட்புக் குழுவினர் கண்டுபிடித்துள்ளனர். ஐந்து பேரை இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!

From around the web