பள்ளி, கல்லூரிகளுக்கு அரைநாள் விடுமுறை!! கொண்டாடத் தயாராகும் மாணவர்கள்!!

 
விடுமுறை

தமிழகத்தில் மாண்டஸ் புயலால் பல்வேறு பாதிப்புக்கள் உருவாகியுள்ளன.  இதற்கான மீட்பு பணிகளை தேசிய மற்றும் தமிழக பேரிடர் மீட்பு குழுக்கள்  தீவிரமாக்கப்பட்டுள்ளன. ஏரிகள், குளங்கள் என நீர்நிலைகள் அனைத்தும் நிரம்பியுள்ளன. உபரிநீர் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தேசிய மற்றும் தமிழக பேரிடர் மீட்பு குழுக்கள் போர்க்கால அடிப்படையில் மீட்பு பணிகளை செய்து வருகின்றன. டிசம்பர் 13 வரை மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில்  உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு பிற்பகலுக்கு பிறகு  அரைநாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.  செங்கல்பட்டு மாவட்டத்தில் காலை முதல் மழை பெய்து வரும் நிலையில், விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் விளக்கம் அளித்துள்ளார். 

தற்போது மாண்டஸ் புயலால் உருவான  பாதிப்பில் இருந்து மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வரும் நிலையில் தமிழகத்தில் டிசம்பர்13ம் தேதி வரை மீண்டும் கனமழை பெய்யக்கூடும் என  இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில்  அடுத்த 2 மணி நேரத்தில் 17 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது . அதன்படி சென்னை, திருவள்ளூர், சேலம், தருமபுரி, திருப்பூர், நீலகிரி, தேனி, திண்டுக்கல், மயிலாடுதுறை, கடலூர், அரியலூர், தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை  மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

கனமழை தொடரும்!! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!!

சென்னை, தென் மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த மாண்டஸ் புயல் மாமல்லபுரத்திற்கு அருகே கரையை கடந்தது. இதனால் சென்னை உட்பட தமிழகத்தின் வட மாவட்டங்களில் கனமழை பொழிந்தது. இந்த நிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் இன்று முதல் வருகிற 13-ந்தேதி வரை ஒருசில இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது.

வானிலை ஆய்வு மையம்

மாண்டஸ் புயல் கரையைக் கடந்து படிப்படியாக வலுவிழந்து வரும் நிலையில் தற்போது உள் தமிழகத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி நீடித்து வருவதாகவும் இது வட உள் மாவட்டங்களில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மேலும் வலுவிழக்கக்கூடும் என்றும் இதனால் இன்று முதல் வருகிற 13-ந்தேதி வரை தமிழகம் மற்றும் புதுவை பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஒரு சில இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

மப்பேறி தள்ளாடும் நாய்!! மதுவை குடித்ததால் பரிதாபம்!!

From around the web