குஷியான அறிவிப்பு! அரசு ஊழியர்கள் 3 குழந்தை பெற்றுக் கொண்டால் 2 முறை ஊதிய உயர்வு!

 
கர்ப்பிணி

அரசு ஊழியர்கள், மூன்று குழந்தைகளைப் பெற்றுக் கொண்டால், இரு முறை அவர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்படும் என்று சிக்கிம் மாநில அரசு அறிவித்துள்ளது. உலகளவில் அதிக மக்கள்தொகை கொண்ட நாடுகள் பட்டியலில் இந்தியா 2ஆவது உள்ளது. இருந்தபோதும், வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான சிக்கிமில் மக்கள்தொகை குறைவாகவே உள்ளது. இதனை அந்த மாநில அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில், சிக்கிமை சேர்ந்த பெண் அரசு ஊழியர்கள் ஒரு குழந்தைக்கும் அதிகமாக குழந்தைகள் பெற்றுக்கொண்டால் அரசின் சார்பில் பல்வேறு சலுகைகள் வழங்கப்படும் என்று அந்த மாநில அரசு அறிவித்துள்ளது.

சிக்கிம் மாநிலத்தின் மொத்த மக்கள்தொகை 6 லட்சத்து 10 ஆயிரத்து 577 ஆகும். இங்கு குழந்தை பிறப்பு விகிதம் 1.1 சதவீதமாக உள்ளது. எனவே, குழந்தை பிறப்பு விகிதத்தை அதிகரிக்கும் நோக்கத்தில் சிறப்பு ஊதியம் உள்ளிட்ட சலுகைகளை சிக்கிம் முதல்வர் பிரேம் சிங் தமங் அறிவித்துள்ளார்.

கொரோனா தடுப்பூசிகளை கர்ப்பிணி பெண்கள் எடுத்துக் கொள்ளலாம்!ஆய்வு முடிவுகள்

இதுபற்றி சிக்கிம் முதல்வர் பிரேம் சிங் தமங் கூறியதாவது, பெண் அரசு ஊழியர்கள் 2ஆவது குழந்தை பெற்றுக்கொண்டால் சிறப்பு ஊதிய உயர்வு வழங்கப்படும். 3ஆவது குழந்தை பெற்றுக்கொண்டால் இரண்டு ஊதிய உயர்வு அளிக்கப்படும். சிக்கிம் மக்கள், ஒன்றுக்கும் மேற்பட்ட குழந்தைகளை பெற்றுக்கொண்டால் பல நிதி உதவிகள் அளிக்கப்படும். குழந்தை பிறக்காத பெண்களுக்கு செயற்கை கருத்தரித்தல் (ஐவிஎஃப்) முறையில் சிகிச்சை அளிக்கும் வசதியை முன்னெடுக்கவும் அரசு முடிவு செய்துள்ளது.

sikkim

ஐவிஎஃப் முறையில் குழந்தை பெறும் பெண்களுக்கு ரூ.3 லட்சம் நிதி உதவி அளிக்கப்படும். பேறுகால விடுப்பாக பெண் அரசு ஊழியர்கள் 365 நாட்கள் எடுத்துக்கொள்ளலாம். புதிதாக தந்தையாகும் ஆண்களுக்கு 30 நாள் விடுப்பு அளிக்கப்படும். குழந்தை பிறப்பு விகிதத்தை அதிகரிக்கவே இந்த சலுகைகளை அறிவித்துள்ளோம், என அவர் தெரிவித்துள்ளர். 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

From around the web