30 வயதிற்குள் குழந்தை பெத்துக்கோங்க.. முதல்வரின் சர்ச்சைப் பேச்சு!

 
அசாம் சர்மா

வளரிளம் பருவத்தில் பெண்களுக்கு திருமணம் செய்வது தவறு என்று உணர்ந்து பால்ய விவாகத்தை எல்லாம் மறந்து நெடுந்தூரம் சமூகம் பயணிக்க துவங்கி விட்டது. இருந்தாலும், இங்கொன்றும் அங்கொன்றுமாக உறவினர்களுக்குள்ளேயே 16, 17 வயதுகளில் பெண்களின் படிப்பை பாதியில் நிறுத்தி தாய்மாமனுக்கோ, அத்தை  மகனுக்கோ உறவினர்கள் ஒன்றுகூடி பேசி, திருமணம் செய்து வைத்து விடுகின்றனர்.

பெண்களுக்கு படிப்பெதற்கு என்கிற காலம் எல்லாம் மலையேறி, ஆட்டோ, காரில் துவங்கி ரயில், ராக்கெட் வரையில் பெண்கள் ஆதிக்கம் செலுத்த துவங்கி உள்ளனர். பல குடும்பங்கள் பெண்களின் வருவாயையும், உழைப்பையும் நம்பியே இருக்கிறது. ஆண்கள் அதிகளவில் பொறுப்பில்லாமல் இருப்பதாக ஆய்வறிக்கை கூறுகிறது. இந்நிலையில், 30 வயதிற்குள் பெண்கள் திருமணம் செய்து கொண்டு தாய்மை அடைய வேண்டும் என அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வாஸ் சர்மா பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அசாம் மாநிலத்தில் பாஜக தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. ஹிமந்தா பிஸ்வாஸ் சர்மா அசாம் மாநில முதல்வராக உள்ளார். அங்கு பெண்களுக்கு உரிய வயதிற்கு முன்பு திருமணம் செய்வதையும், கருத்தரிப்பதையும் தடுக்கும் விதமாக புதிய சட்டத்தை கொண்டுவந்துள்ளது ஆளும் பாஜக அரசு.

அதன்படி, 14 வயதுக்கு குறைவான பெண்களை திருமணம் செய்யும் நபர்கள் மீது போக்சோ சட்டம் பாயும் எனவும், 14-18 வயது பெண்களை திருமணம் செய்யும் நபர்கள் மீது குழந்தை திருமணம் தடுப்பு சட்டம் பாயும் என அசாம் அமைச்சரவை முடிவெடுத்து உத்தரவிட்டுள்ளது.

Child Marriage

இந்த நிலையில், கவுஹாத்தியில் நடைபெற்ற விழா ஒன்றில் முதல்வர் ஹிந்தா பிஸ்வாஸ் சர்மா பங்கேற்று பேசினார். இதில் மாநில அரசு பெண்கள் நலன் சார்ந்து எடுத்து வரும் திட்டம் குறித்து பேசினார். 18 வயதுக்கு குறைவான பெண்களுக்கு திருமணம் நடப்பதை குறைத்து தடுக்கவே அரசு புதிய சட்டங்களை இயற்றி வருகிறது. எப்படி, சிறு வயதில் கருதரிப்பது கேடான விஷயமோ, அதேபோல வயது தாண்டி குழந்தை பெற்றுக்கொள்வதும் உகந்த செயல் அல்ல.

அனைத்து விஷயங்களையும் ஒரு குறிப்பிட்ட வயதில் செய்ய வேண்டிய விதத்தில் தான் கடவுள் நமது உடலை படைத்துள்ளார். எனவே, 22 - 30 வயது காலகட்டத்தில் பெண்கள் தாய்மை அடைய வேண்டும். இந்த வயதில் இருக்கும் பெண்கள் திருமணமாகாமல் இருந்தால் விரைவில் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்றார்.

Pregnant

முதல்வரின் இந்த கருத்து சர்ச்சையாக சமூக, பெண்ணிய ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். திருமணம் என்பது பெண்களின் தனிப்பட்ட உரிமை எனவும், இந்த வயதில் திருமணம் செய்ய வேண்டும், குழந்தை பெற வேண்டும் என்று பேசுவது முதல்வரின் வேலையல்ல என விமர்சித்து வருகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்!

From around the web