மீண்டும் மஞ்சப்பை விருதுக்கு விண்ணப்பித்து விட்டீர்களா?! முழு தகவல்கள்!!

 
மஞ்சப்பை

தமிழகத்தில் சுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுக்கும் வகையிலும், பிளாஸ்டிக் இல்லாத தமிழகமாக மாற்றவும் தமிழக அரசு மீண்டும் மஞ்சப்பை திட்டத்தை தொடங்கியது. இது குறித்து விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மாவட்ட அளவில் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.  அதன் ஒரு பகுதியாக, தமிழக சுற்றுச்சூழல் அமைச்சர் கடந்த சட்டசபை கூட்டத்தில் ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பைகளை தடை செய்வதை திறம்பட செயல்படுத்த வேண்டும் என தெரிவித்தார்.

மஞ்சப்பை

அத்துடன் தங்கள் வளாகத்தை பிளாஸ்டிக் இல்லாத வளாகமாக மாற்றும் சிறந்த பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் வணிக வளாகங்களுக்கு மஞ்சப்பை விருதுகள் வழங்கப்படும் எனவும் சட்டசபையில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.  அதன்படி, ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் கைப்பைகளுக்கு மாற்றாக மஞ்சப்பை   பயன்பாட்டை ஊக்குவித்து சிறப்பாக செயல்படுத்தும் 3 சிறந்த பள்ளிகள், 3 சிறந்த கல்லூரிகள் மற்றும் 3 சிறந்த வணிக வளாகங்களுக்கு இந்த விருதுகள் வழங்கப்பட உள்ளன.  இந்த விருது பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூ.10 லட்சமும், 2ம் பரிசாக ரூ.5 லட்சமும், 3ம் பரிசாக ரூ.3 லட்சமும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது .

மஞ்சப்பை

தமிழகம் முழுவதும்  மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தால் பிளாஸ்டிக் இல்லாத வளாகங்களாக மாற்ற ஊக்குவிப்பதில் முன்மாதிரியாக திகழும் பள்ளிகள், கல்லூரிகள், வணிக வளாகங்களுக்கு மஞ்சப்பை விருதுகள் வழங்கப்பட உள்ளன. இதற்கான விண்ணப்ப படிவங்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான http://madurai.nic.in மூலம்  பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம் என மதுரை மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார். இந்த படிவத்தில் உள்ள இணைப்புகள் தனிநபர் அல்லது நிறுவன தலைவரால் கையொப்பம் இடப்பட வேண்டும். இந்த பிரதிகளில் இரண்டை மாவட்ட கலெக்டரிடம் சமர்ப்பிக்க வேண்டும். இந்த விருதுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை  மே1ம் தேதி, 2023க்குள் சமர்ப்பிக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

From around the web